ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால! (15)
ஹாய் டியர்ஸ்... ரொம்ப... ரொம்ப... ஆர்வமான உங்களது கற்றுக் கொள்ளும் திறன் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது பட்டூஸ்... போன வாரம் என்ன படித்தோம். ஸ்டிராங் வெர்ப்ஸ், வீக் வெர்ப்ஸ்தானே...இதுவரை Present tense, past tense, Future tense மட்டும்தான் படித்தோம் அல்லவா? இப்போது புதிதாக ஒன்று அறிமுகமாகிறது. அதுதான் Past participle - வினையெச்சம். அதாவது முற்று பெறதா வினை அல்லது செயல்களை இப்படிச் சொல்கிறோம்.Past participle என்றால் முற்றுப்பெறாத வினை - வினையெச்சம். இச்சொல் தனித்து இயங்காது. இத்துடன் சில வார்த்தைகள் சேர்ந்தால்தான் முழுமையான அர்த்தம் கிடைக்கும். இந்த Past participlesக்கு முன் have, had, has, will haveபோன்ற சொற்கள் இடம்பெற்றால்தான் முழுமையான வினைச்சொல்லாக மாறும். இதுபற்றி பிறகு விளக்கமாக கூறுகிறேன்.இவற்றை மூன்று மூன்றாக சேர்த்து படித்து மனப்பாடம் செய்து கொள்ளுங்கள். பிறகு, வாங்கியங்கள் அமைக்கும்போது இவை மிகவும் பயன்படும். அடுத்து Simple presentல் மூன்று வார்த்தைகளைக் கொண்டு வாக்கியம் அமைக்கப்போறோம். சரியா? ஆர் யு ரெடி?1.I play foot ball - நான் கால்பந்து விளையாடுகிறேன்.2.You play foot ball - நீ கால்பந்து விளையாடுகிறாய்.3.They play foot ball - அவர்கள் கால்பந்து விளையாடுகின்றனர்.4.We play foot ball - நாங்கள் கால்பந்து விளையாடுகிறோம்.5.Sathya plays foot ball - சத்யா கால்பந்து விளையாடுகிறாள்.இவை S+V+O அமைந்த வாக்கியங்கள். ஏற்கனவே இதை குறித்து உங்களுக்கு நான் விளக்கியுள்ளேன். இந்த வாக்கியங்கள் எதை , எவை என்று கேள்வி கேட்டால் அதற்கு பதில் வரும். கேட்டுப்பாருங்களேன்.இதேபோன்று Adverbஐ வைத்து வாக்கியங்கள் எப்படி அமைப்பது என்று பார்ப்போமா?They go there - அவர்கள் அங்கேபோகின்றனர்.Rani Comes here - ராணி இங்கே வருகிறாள்.It works well - அது நன்றாக வேலை செய்கிறது.He plays well - அவன் நன்றாக விளையாடுகிறான்.கடைசியாக... Simple present வாக்கியங்களை எதிர்கால நடவடிக்கைகளை தெரிவிப்பதற்கும் பயன்படுத்தலாம். எதிர்கால நடவடிக்கைகளை Simple Future ரிலும் தெரிவிக்கலாம்.முக்கியமாக: நம்முடைய அன்றாடச் செயல்கள், பழக்க வழக்கங்கள், நிரந்தர உண்மைகள், இயற்கையான திறன்கள், நமது விருப்பு, வெறுப்புகள் இவற்றை பற்றி குறிப்பிட Simple Present வாக்கியங்களை பயன்படுத்த வேண்டும்.ஓ.கே., இன்றைய பாடம் ஓவர்!Present tense - Past tense - Past participleBeat - Beat - BeatenBite - Bit - BittenBreak - Broke - BrokenBlow - Blew - BlownDo - Did - DoneFly - Flew - FlownFeed - Fed - FedLay - Laid - LaidRide - Rode - RiddenSeek - Sought - SoughtWear - Wore - Wornபேசிப் பழக குட்டி வாக்கியங்கள்!1. I love my country - நான் என் நாட்டை நேசிக்கிறேன்.2.He reads news paper - அவன் செய்தித்தாள் படிக்கிறான்.3.She reads the bible daily - அவள் தினமும் பைபிள் வாசிப்பாள்.4.I come on feet - நான் நடந்து வருவது உண்டு.5.Priya works hard - பிரியா கடினமாக உழைக்கிறாள்.6.Latha calls me - லதா என்னை அழைக்கிறாள்.7.They eat egg - அவர்கள் முட்டை சாப்பிடுகின்றனர்.ஸீ யு நெக்ஸட் வீக்!பை... பை... வர்ஷிதா மிஸ்!