உள்ளூர் செய்திகள்

கருப்பு உளுந்து பாயாசம்!

தேவையான பொருட்கள்:கருப்பு உளுந்து - 100 கிராம்வெல்லம் - 100 கிராம்துருவிய தேங்காய் - சிறிதளவுஉப்பு, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:தோல் நீக்காத கருப்பு உளுந்தை சுத்தம் செய்து, ஆறு மணி நேரம் ஊற வைத்து, தேவையான தண்ணீருடன் நன்றாக அரைக்கவும். அடி கனமான பாத்திரத்தில், இரண்டு கப் தண்ணீரை கொதிக்க வைத்து, உளுந்து விழுதை சேர்க்கவும். நன்றாக கொதித்த பின், வெல்லம் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும். சுவைமிக்க, 'கருப்பு உளுந்து பாயாசம்!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர். உடல் நலம் காக்கும்.- கே.பிரேமா, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !