உள்ளூர் செய்திகள்

கேள்விகளால் வேள்வி!

கள்ளக்குறிச்சி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1998ல், 10ம் வகுப்பு படித்த போது, சமூக அறிவியல் பாட ஆசிரியையாக இருந்தார் சுசீலா. வகுப்பில் ஒவ்வொரு பாடம் நடத்தியதும், 'பாடத்தில் கொடுக்கப்பட்டுள்ள கேள்விக்கான பதிலை மட்டும் படிக்க கூடாது. பாடம் முழுவதையும் படித்து, புதிய கேள்விகளை உருவாக்க வேண்டும். அதற்கு உரிய பதில்களையும் தயார் செய்து வாருங்கள்...' என அறிவுரை கூறினார். பாடங்களை ஊன்றி படித்து, ஏராளமான கேள்வி - பதில்களை தயாரித்து பாராட்டுகள் பெற்றேன். இந்த பயிற்சியை தொடர்ந்து பின்பற்றியதால், அரசு பொதுத்தேர்வில், 97 மதிப்பெண்கள் பெற்றேன். அவர் கற்றுத் தந்தது இன்றும் நினைவில் உள்ளது. இப்போது எனக்கு, 36 வயதாகிறது. அந்த ஆசிரியை வழியில் என், 10 வயது மகளுக்கு பாடம் கற்பித்து வருகிறேன். அதன் மூலம் அந்த ஆசிரியையின் நினைவைப் போற்றுகிறேன். - கே.தனலட்சுமி, விழுப்புரம்.தொடர்புக்கு: 94869 11635


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !