உள்ளூர் செய்திகள்

ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (13)

ஹலோ... மாணவாஸ்... இது என்ன பாஷை மிஸ் என்று விழிக்கிறீர்களா? இதுக்குப் பேர்தான், 'தங்லீஷ்.' அது வேணாம் உங்களுக்கு? போனவாரம் கொடுத்த 'ஹோம் ஒர்க்ஸ்' எல்லாம் முடிச்சீங்களா? என்ன சைலண்ட் ஆ... இருக்கீங்க? முடிச்சிட்டீங்களா குட்... குட்...கடந்தவாரம், Believe என்ற வினைச் சொல்லை வைத்து நிகழ்கால வாக்கியத்தை அமைத்தோம் அல்லவா? அதே வினைச்சொல்லை கொண்டு இறந்த கால, எதிர்கால வாக்கியங்களை அமைக்கணும். சரியா? அப்படின்னா உங்களுக்கு Present tense, Past tense, Future tense தெரிஞ்சிருக்கணும்.இதெல்லாம் நீங்க, 'ஸ்கூல்ல' படிச்சிருப்பீங்கதானே? இருந்தாலும் ஒரு சில வார்த்தைகளை நான் உங்களுக்கு கொடுக்கிறேன். இவற்றை எல்லாம் நீங்கள் மனப்பாடம் செய்துதான் ஆகணும். சரியா?இப்போI write Hindi - நான் இந்தி எழுதுகிறேன்.I play cricket - நான் கிரிக்கெட் விளையாடுவேன்.I drink coffee - நான் காபி குடிக்கிறேன்.They drink coffee - அவர்கள் காபி குடிக்கிறார்கள். He drinks coffee - அவன் காபி குடிக்கிறான் இங்கு மட்டும் ஏன் Verb உடன் 's' சேர்க்கிறோம்னு தெரியுதா?இதைப் பற்றி நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். III Person singular present tense வாக்கியத்தை எழுதும்போது Verb உடன் s சேர்த்துக் கொள்ள வேண்டும்.இதில் He என்பது III Person தானே.... புரியலியா? I Person ஆகிய நான் II Person ஆகிய உங்களிடம் III Person ஆகிய அவனைப் பற்றி சொல்கிறேன். இங்கே III Person, singular, present tense வருவதால், 's' சேர்க்கிறோம் சரியா.அடுத்து இரண்டு வார்த்தையில் அமைந்த வாக்கியங்கள் சிலவற்றை நான் உங்களுக்குத் தருகிறேன். அதை பயன்படுத்தி நீங்களாகவே எழுதி, பேசி பழகுங்கள். சரியா!1. I Send - நான் அனுப்புகிறேன்.2. I walk - நான் நடக்கிறேன்.3. Reethu appoints - ரீத்து நியமிக்கிறாள்.4. The manager arranges - மேனேஜர் ஏற்பாடு செய்கிறார்.5. It announces - அது தெரிவிக்கிறது.6. You ride - நீ சவாரி செய்கிறாய்.7. We play - நாங்கள் விளையாடுகிறோம்.8. He attacks - அவன் தாக்குகிறான்.9. You eat - நீ சாப்பிடுகிறாய்.10. It weeps - அது அழுகிறது.இதே போன்று, வினைச்சொற்களை Verb பயன்படுத்தி நிறைய வார்த்தைகளை நீங்களாகவே எழுதி எழுதிப் பாருங்க... அப்பதான் உங்களது மூளையில் ஆங்கில மொழி அப்படியே பதியும். ஏற்ற இடத்தில் பேச வேண்டிய வார்த்தைகளை உங்களது மூளை, உங்க நாவுக்கு கட்டளை கொடுக்கும் போது நீங்க ஆங்கிலம் பேசி அசத்த வேண்டியதுதான்.சரியா?Simple Present - Simple Past - Simple FutureI go நான் போகிறேன் - I went நான் போனேன் - I shall go நான் போவேன்I write நான் எழுதுகிறேன் - I wrote நான் எழுதினேன் - I shall write நான் எழுதுவேன்I play நான் விளையாடுகிறேன் - I played நான் விளையாடினேன் - I shall play நான் விளையாடுவேன்ஸீ யு தென், பை! பை! வர்ஷி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !