நண்டு!
உலகிலேயே மிகப் பெரிய நண்டு ஜப்பானில் உள்ள சிலந்தி நண்டு தான். உலகில் உள்ள எல்லாப் பிராணிகளும் முன் பக்கமாகவே நடக்கும். பக்கவாட்டில் நடக்கும் ஒரே உயிரினம் நண்டு மட்டுமே.நண்டு கடினமான ஓட்டுடன் வளர முடியாது. அதனால் ஆண்டு தோறும் ஓட்டைக் கழற்றி விடும். புது ஓடு உருவாகிக்கொண்டிருக்கும்போது, பழைய ஓட்டைக் கழற்றி விடும்.தனது எதிரிகள் கவ்விக்கொள்ளும் தன் உடல் உறுப்பைத் துண்டித்துவிட்டு தப்பித்துக் கொள்ளும். பின்னர் அந்த உறுப்புகள் வளர்ந்துவிடும்.அரேபிய தீபகற்பத்திற்கு அருகில் உள்ள வெப்பமான உப்பு நீர் ஏரிகளில் வாழும் சில நண்டுகள், வெப்பநிலை 35 டிகிரி சென்டி கிரேடாகக் குறைந்தால் குளிரில் நடுநடுங்கி இறந்து விடுகின்றன. நண்டுகள் முன்னோக்கியும், பின்னோக்கியும் நகரக் கூடியன.கடல் நண்டின் ரத்தம் நீல நிறமாக இருக்கும். பெரும் புயல் வீசுவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே கடல் நண்டுகள் கரைக்கு வந்து விடும். நண்டுகள் ஒன்றுக்கொன்று ஒற்றுமையுடன் இருப்பதில்லை. இவற்றின் பற்கள் அதன் வயிற்றுக்குள் அமைந்துள்ளன.கொள்ளைக்கார நண்டு!கொள்ளை நண்டு அல்லது தென்னை மர நண்டு என்று அழைக்கப்படும் ஒரு வகை நண்டு முதுகெலும்பற்ற பிராணி. வளர்ச்சி அடைந்த இந்த வகை நண்டின் கால்கள் 75 சென்டிமீட்டர் நீளம் கொண்டவை. இந்த வகை நண்டுகளின் எடை நான்கு கிலோ வரை இருக்கும். தென்மேற்கு பசிபிக் கடலிலும், இந்தியப் பெருங்கடலிலும் காணப்படுகின்றன.மரங்களில் வேகமாக ஏறக்கூடிய திறனைப் பெற்றுள்ளன. எல்லாவற்றையும் திருடும் தன்மையும், தேங்காயின் சதைப்பற்றை உண்ணக்கூடிய தன்மையும் பெற்றுள்ளது.இந்த வகை நண்டினால் தேங்காயை உரிக்க முடியாது. ஆனால், உரித்து வைத்துள்ள தேங்காயை உண்ணும். பெண் நண்டுகள் கடலில் முட்டையிடுகின்றன. குஞ்சுகள் கடலில்தான் பிறக்கின்றன. நண்டுகள் நிலத்திற்கு வரும் போது கொஞ்சம் பெரிதாக வளர்ந்து விடுகின்றன. இவை, நிலத்தில் வாழ்ந்தாலும் தண்ணீரில் மூழ்கி சில நிமிடங்கள் வரை உள்ளேயே இருக்கும் திறனைப் பெற்றுள்ளன.நண்டுப் பார்வைமிகவும் அடர்த்தியான அசுத்தமான கடல் நீரில் கூட நண்டுகளால் தெளிவாகப் பார்க்க முடியும். எவ்வளவு ஆழமான பகுதியில் கடல் நண்டுகள் இருந்தாலும் அவற்றின் கண் பார்வைத்திறன் குறையாது. மேலும், பச்சோந்திகள் இடத்திற்குத் தகுந்தவாறு நிறம் மாறிக்கொள்வது போல நண்டுகளின் கண்கள் இடத்திற்கு ஏற்ற மாதிரி பார்வைத்திறனை அமைத்துக் கொள்கின்றன.நிறம் மாறும் நண்டுகள்!கடல் நண்டுகளின் முதுகு ஓடுகள் நீலமும், கறுப்பும் கலந்ததாகக் காணப்படும். ஆனால், சமைக்கும்போது அவற்றின் உடல், இளம் சிவப்பு நிறமாக மாறிவிடுகிறது. இதற்கு 'கரோடினாய்டு' என்னும் சிவப்பு நிறமிதான் காரணம் என்பதை கண்டுபிடித்துள்ளனர். இந்த உண்மையின் மூலம் கேன்சர் உள்பட பலவித நோய்களைக் குணப்படுத்த வழி பிறந்திருக்கிறது.