குட்டீஸ் கார்னர்!
நாய் ஒரு இடத்தில் உட்காருவதற்கோ அல்லது படுப்பதற்கு முன்போ, அவ்விடத்தை இரண்டு அல்லது மூன்று முறை சுற்றி வரும். இதற்கு காரணம் என்ன தெரியுமா குட்டீஸ்!நாய் ஒரு இடத்தை சுற்றும் போதே காற்று எந்த திசையிலிருந்து வீசுகிறது என்பதை உணர்கிறது. பின்பு காற்று வீசும் திசைக்கு எதிராக உட்காரவோ, படுக்கவோ செய்கிறது. இந்த செயலால் தன் மோப்ப சக்தியை பயன்படுத்தி எதிரிகளின் நடமாட்டத்தை விரைவில் உணர்ந்து கொள்ளுகிறது. இப்போது காரணம் தெரிஞ்சுக்கிட்டீங்களா குட்டீஸ்!