உள்ளூர் செய்திகள்

குட்டீஸ் கார்னர்!

சீனாவில் ஜீனன் என்ற இடத்தில், 'டாலு ரோபோட்' என்ற ரெஸ்டாரண்ட் உள்ளது. இங்கு வரவேற்பாளர், பணியாளர், பொழுது போக்காளர் எல்லாரும் ரோபோட்டுகள்தான். இங்கே, ரோபோட்கள் செல்வதற்கென ஒரு பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதைகளில் சென்றுதான் உணவுகளை பரிமாறும். இந்தப் பாதையில் ஏதேனும் தடை ஏற்படும் போது அது தன் பணியை நிறுத்திவிடும்.மனித உடலுள்ள சில பெரிய எலும்புகளில் காணப்படும், 'எலும்பு மஞ்சை' மென்மையான திசுக்களால் ஆனது. இது ஒவ்வொரு நொடிக்கும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட ரத்த அணுக்களை உற்பத்தி செய்கிறது.சீனாவின் ஹெனன் மாகாணத்தை சேர்ந்த, 'சாங் சாங் கியாங்' என்பவர் தன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு காருக்கு பதிலாக மண்ணை தோண்டும் புல்டோஸரை பயன்படுத்தினார். அதாவது, மணமகனும், மணமகளும் புல்டோசரில் மண்ணைதோண்டும் பக்கெட்டில் நின்று உலாவந்தனர்.டிசம்பர் 2010ல், அமெரிக்காவை சேர்ந்த 51 வயது 'அஸ்ரிடா பர்மன்' என்பவர் 146.5 கிலோ எடை கொண்ட ஒரு ஜோடி 'ஷூ'வை அணிந்து 10 கிலோமீட்டர் தூரம் நடந்து சாதனைப்படைத்தார். 'அதிக எடை கொண்ட ஷூவை அணிந்து நீண்ட தூரம் நடந்தவர்' என்ற சாதனைப் படைத்தார். இவர் பெயர் 100 முறை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இவரது சமீபத்திய சாதனை இங்கிலாந்திலுள்ள 'டவர் ஆப் லண்டனில்' நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !