குட்டீஸ் கார்னர்
குட்டி பாப்ஸ்களுக்கு பால் கொடுப்பதாக இருந்தால், வாயகன்ற பாட்டிலைத்தான் உபயோகப்படுத்துதல் வேண்டும். குறுகலான வாய் உள்ள பாட்டிலைக் கழுவுவது சிரமம். குழந்தைக்குப் பால் கொடுக்கும் முன் பாட்டிலைப் பிரஷ்ஷினால் நன்கு கழுவி விட்டு, ஒரு பாத்திரத்தில் பாட்டிலையும் ரப்பரையும் போட்டு தண்ணீர் ஊற்றி தண்ணீரைக் கொதிக்க வைத்தல் வேண்டும். பாட்டிலும் ரப்பரும் ஒரு சில நிமிடங்கள் கொதித்த பின்னர், பாட்டிலை எடுத்து அதில் பாலூற்றிக் கொடுத்தலே முறையாகும். மேலும், தாய்மார்கள் கைகளைச் சுத்தமாகக் கழுவிக் கொண்டுதான், பாலினைத் தயார் செய்தல் வேண்டும். பாலினைத் தயார் செய்யும் பாத்திரங்களும் மிகவும் சுத்தமாக இருந்தல் வேண்டும்.இளம்பிள்ளைவாதத்தைத் தடுக்க தடுப்பு மருந்துகள் உள்ளன. தடுப்பு ஊசியும், சொட்டு மருந்தும் உள்ளன. அதில் தடுப்பு சொட்டு மருந்தைத்தான் உலக சுகாதாரக் கழகம் பரிந்துரைக்கிறது. ஏனெனில், தடுப்பு ஊசி போடுவதால், அவ்வூசிலே சில சமயங்களில் தசை செயலிழப்பு, இல்லாத இளம்பிள்ளை வாதத்தைத் தசை செயலிழப்பு உடைய இளம் பிள்ளைவாதமாக ஆக்கவிடலாம். ஆனால், சொட்டு மருந்துகள் உணவுப் பாதையில் எதிர்ப்பு சக்தியினை உருவாக்கி, குழந்தைகளை நன்கு பாதுகாக்கும்.