உள்ளூர் செய்திகள்

தொடாதே தூக்கி வீசிடுவேன்!

மனிதனின் உடலில் மின்சாரம் பாய்ந்தால் தசைகள் அளவுக்கதிகமாகச் சுருங்கி விடுகிறது. எனவே, மின்சாரத்தால் தாக்கப்படும் நபர் சுவாசிக்க இயலாமல் போய்விடும். அதைத் தொடர்ந்து இதயத் துடிப்பு சீர்குலைகிறது. இந்நிலையே அம்மனிதரை மரணமடையச் செய்கிறது.அதிக வோல்ட்டேஜ் மின்சாரம் பாயும் போதும் அதனால் தோன்றும் அதிக உஷ்ணம் நரம்புகள், திசுக்கள், தசைகளை கருகிவிடச் செய்வதும் உண்டு. அதனாலும் மரணம் சம்பவிக்கும். பொதுவாக மின்சாரம் பாயும் ஒரு கம்பியை ஒரு கையால் தொடும்போது, அவர் மின்சாரத்தால் தூக்கி வீசப்படுகிறார். ஆனால், இரு கைகளாலும் தொடும் போது, அவரது இதயத்தின் வழியே மின்சாரம் பாய்ந்து மரணம் சம்பவிப்பது நிச்சயம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !