உள்ளூர் செய்திகள்

சாமர்த்தியமான பேச்சு!

ஒரு காலத்தில் ஆங்கிலேயர்க்கு பிரெஞ்சுக்காரர்களை கண்டாலே பிடிக்காது. 1774ம் ஆண்டு வால்டேர் என்ற பிரபல பிரெஞ்சு இலக்கியவாதி, லண்டன் நகர் தெருவில் நடந்து கொண்டிருந்தார். பிரெஞ்சுக் காரர்களை வெறுத்த சில ஆங்கிலேயர்கள், அவரைக் கொல்வதற்காகப் பாய்ந்து வந்தனர். அப்போது வால்டேர் மிகவும் சாதுர்யமாக, 'நண்பர்களே, நான் ஆங்கிலேயனாகப் பிறக்காமல் பிரெஞ்சுக்காரனாகப் பிறந்ததே கடவுள் எனக்கு கொடுத்த தண்டனையாக நினைக்கிறேன். என்னைக் கொல்ல வருகிறீர்களே!' என்று உருக்கமாகக் கூற, அதைக் கேட்ட அந்த ஆங்கிலேய வெறிக் கும்பல் அவரை ஒன்றும் செய்யாமல் விட்டுச் சென்றது. புத்திசாலித்தனம் அவர் உயிரை எப்படி காப்பாற்றியது பார்த்தீர்களா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !