உள்ளூர் செய்திகள்

ஒவ்வொரு நாளும்!

ஜப்பான் நாட்டில் சிறப்பான இயக்குனராக கவுரவ ஆஸ்கர் விருது வழங்கிப் புகழப்பட்டவர் 'அகிராகுரசோவா.' ஆரம்பக் கட்டத்தில் கதை எழுதுவதற்கு அவருக்கு நேரமேயில்லை. அவ்வளவு அதிகமான வேலைகள். ஆயினும் ஒவ்வொரு நாளும் எப்படியாவது தனது கனவுப் படத்திற்காக ஒரு பக்கம் எழுதிவிட்டுச் சென்றுவிடுவார். ஓர் ஆண்டின் முடிவில் அவருக்கு, 365 பக்கங்கள் கொண்ட ஒரு திரைக்கதை உருவானது. இப்படி நேரத்தைப் பயன்படுத்தி உருவாக்கி உலகப் புகழ்பெற்ற பல படங்களை எழுதி இயக்குனர் ஆனார் இந்த மனிதர்.ஒவ்வொரு நாளும் எதையாவது செய்ய வேண்டும் என்று புலம்பிக் கொண்டே எதையும் செய்யாது, பல சமயம் நாட்களைக் கடத்திவிடுகிற மனிதர்களுக்கு, அகிரா குரசோவாவின், 'அன்றாடம் கொஞ்சம் வேலை' என்ற பாணி மிகுந்த பலன் தருமே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !