உள்ளூர் செய்திகள்

தெரிஞ்சுக்கோங்க!

இன்று பச்சை பட்டாணியை பற்றி தெரிந்து கொள்ளலாமா பட்டூஸ்!இறைச்சிக்கு நிகரான புரதச்சத்து தரக்கூடியது பச்சைப் பட்டாணி. இது உடலுக்கு சக்தியை கொடுக்கும். இதில் கால்ஷியம், பொட்டாஷியம், வைட்டமின் ஏ,பி,சி, நார்ச்சத்து போன்றவை உள்ளதால் மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் இல்லாமல் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ வைக்கும். இதிலுள்ள வைட்டமின் 'ஏ' கண் பார்வைக்கு நல்லது. வைட்டமின் 'பி' வாய்ப்புண், நாக்குப்புண் குணமாகவும், ஜீரண உறுப்புகள் நன்கு செயல்படவும் உதவும். வைட்டமின் 'சி' தலைவலி, உடல்வலி போன்றவை ஏற்படாமல் இருக்கவும், பல் எலும்புகள் உறுதியுடன் இருக்கவும் உதவும்.மேலும், இதில் பாஸ்பரஸ் அதிகம் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கு மூளை பலம் பெறவும், ஞாபக சக்தி அதிகரிக்கவும் உதவுகிறது. அதனால், தினமும் மூன்று ஸ்பூன் அளவு குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஒல்லியாக இருப்பவர்கள் சதைப்பிடிப்புடனும், உடல் வலிமை யுடனும் வளர பச்சைப் பட்டாணியை உணவில் நன்கு சேர்த்து கொள்ளவும்.வாவ்... பச்சை... இனி விட மாட்டேன் உன்னை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !