தெரிஞ்சுக்கோங்க!
* உடலில் களைப்பும், மூளையில் சோர்வும் ஏற்படுவதை அறிவிக்கும் செயலே கொட்டாவி * உண்ணும் உணவில், அதிகப் படியாக புரதம், புளிப்பு பொருள்கள் இருந்தால், அவற்றைச் சிதைக்கும் போது, ஏற்படும் வாயு ஏப்பமாக வெளிவருகிறது * உதரவிதானம் சரிவர சுருங்கி விரிந்து செயல்பட முடியாத போது ஏற்படும் சுவாச சிக்கலே விக்கலாக மாறுகிறது * உணவுப் பாதையில் செல்லவேண்டிய உணவுத் துணுக்குகள் சுவாசப் பாதையில், பாதை மாறி நுழையும் போது, புரை ஏறுதல் நிகழ்கிறது.