உள்ளூர் செய்திகள்

ப்ளாஷ் பேக்!

அன்று...ஜூலை 16, 1999 சிறுவர்மலர் இதழின் அட்டை படத்தில் வந்த இச்சிறுமியை வாழ்த்திய செய்தி இதோ... பெயர் ஜனனி; கடலூரில் வசிக்கிறாள். மூன்றரை வயதில் இருந்தே பாட ஆரம்பித்து விட்டாள். முறைப்படி சங்கீதம் கற்று வருகிறாள்.இரண்டாம் வகுப்புதான் படிக்கிறாள் இந்தச் சிறுமி. வயது ஏழுதான். ஆனால், 20 முறை மேடை ஏறி, கர்நாடக இசைக் கச்சேரி செய்து விட்டாள் என்றால் ஆச்சரியம்தானே!80க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் தெலுங்கு கீர்த்தனைகளை அழகாகப் பாடுகிறாள். இரண்டு மணிநேரம் தொடர்ந்து இடைவிடாது பாடியிருக்கிறாள். கர்நாடகம் கலந்த சினிமாப் பாடல்களையும் பாடுகிறாள். மியூசிக் அகாடமி, ஆல் இந்திய ரேடியோ, ராஜ் டிவி, தூர்தர்ஷன் ஆகியவற்றில் நிகழ்ச்சிகளை கொடுத்திருக்கிறாள். சன் டிவியில், 'வணக்கம் தமிழகம்' நிகழ்ச்சியில், 'சாதனை நாயகி' என்று பாராட்டப்பட்டு பேட்டி மற்றும் பாட்டு பாடி இருக்கிறாள்.இந்த இளம் பாடகி, பின்னாளில் ஒரு எம்.எஸ்.சுப்புலட்சுமியாக வாழ்த்துவோம்!இன்று...இவர்... சென்னையின் பிரபலமான கர்நாடகா இசைப்பாடகி; இசை அமைப்பாளர். ஆயிரத்திற்கும் அதிகமான மேடைகளில் நிகழ்ச்சி நடத்தி இருக்கிறார். இந்திய இசையில் ஆராய்ச்சி பட்டமும் பெற்றிருக்கிறார். 'ஆல் இந்தியா ரேடியோ'வின், 'பி ஹைகிரேட் ஆர்ட்டிஸ்ட்,' பாரதி பாடல் ஆல்பம் தந்து உலகப் புகழ் பெற்றிருக்கிறார்.அதுபோல, இன்று அவர் சிறந்த பாடகியாகவும், இசை அமைப்பாளராகவும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.அன்று நாம் வாழ்த்திய வாழ்த்துதல் இன்று இவர் வாழ்க்கையில் பலித்துவிட்டது. ஹாட்ஸ் ஆப் ஜனனி!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !