உள்ளூர் செய்திகள்

சூத்திரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1990ல், 7ம் வகுப்பு படித்த போது, அறிவியலில், 'லென்சு' பற்றிய பாடம் நடத்தப்பட்டது. அதில், 'குழி, குவி லென்சு' பற்றி பெரும் குழப்பம் ஏற்பட்டது. எந்தந்த லென்சு கிட்ட, துாரப் பார்வையை நிவர்த்திக்கும் என்பது புரியாமல் தவித்தோம்.அதை புரிய வைக்கும் வகையில், சூத்திரம் ஒன்றை எளிமையாக கற்றுத் தந்தார், அறிவியல் ஆசிரியர் ராஜேந்திரன். அருகில் இருக்கும் பொருளை துல்லியமாக பார்ப்பதற்கு, குழி லென்சும், எட்ட இருப்பதைப் பார்க்க, குவி லென்சும் பயன்படுகிறது என மனதில் பதிய வைக்கும் விதமாக, 'கிட்ட குழி தோண்டி, எட்ட குவி...' என்ற மனப்பாட சூத்திரத்தை கற்று தந்தார். லென்ஸ் பயன்பாட்டை புரிய, அது வழிவகை செய்தது. குழப்பமும் தீர்ந்தது.எனக்கு, 41 வயதாகிறது; அந்த ஆசிரியர் கற்றுத்தந்ததை இன்றும் நினைவில் கொண்டுள்ளேன். - கோ.குப்புசுவாமி, கள்ளக்குறிச்சி.தொடர்புக்கு: 98401 46754


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !