போங்க டீச்சர்...
நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது, ஆங்கில பாடம் எடுக்க ஒரு ஆசிரியை வருவார். என் வகுப்பு தோழி ஒருத்தி, ஆசிரியை இலக்கணம் எடுக்க ஆரம்பித்தவுடனே தூங்கிவிடுவாள். ஒருநாள் -இதை கவனித்த ஆசிரியை, பக்கத்தில் இருந்த மாணவியிடம் அப்பெண்ணை எழுப்புமாறு கூறினார். அவளும் அப்பெண்ணை எழுப்பினாள். இந்நிகழ்ச்சி தினமும் தொடர்ந்தது.ஒருநாள் -ஆசிரியை மிகுந்த கோபத்துடன் வகுப்பறைக்கு வந்தார். அன்று அவர் இதுவரை எடுத்த இலக்கணங்களை, 'ரிவைஸ்' செய்து கொண்டிருந்தார். அன்றும் அப்பெண் உறங்கிவிட்டாள். இதைப் பார்த்த ஆசிரியை, அருகில் இருந்த பெண்ணிடம், 'அந்த பெண்ணை எழுப்பு' என்று கோபமாகக் கத்தினார்.உடனே அந்த பெண், 'போங்க டீச்சர்! நீங்க தூங்க வைச்சிட்டே இருப்பீங்க... நான் எழுப்பிட்டு இருக்கணுமா?' என்று கேட்க, ஆசிரியை கோபத்தையும் மறந்து வயிறு குலுங்க சிரிக்க, வகுப்பே சிரிப்பொலியால் அதிர்ந்தது. -வெ.வெண்ணிலா, சென்னை.