குருகுல வாசம்!
காஞ்சிபுரம், பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில், 1959ல், 9ம் வகுப்பு படித்தபோது, தலைமை ஆசிரியராக இருந்தார் கன்னியப்ப முதலியார். மத்திய அரசு விருது பெற்றவர்.வகுப்பறை சுவரில், ஆங்கில இதழில் வெளியான அபூர்வ விநாயகர் படம் ஒட்டப்பட்டிருந்தது. ஒரு நாள் மதிய உணவு இடைவேளையில், அந்த படத்தின் சிறப்புகள் பற்றி, குழுவாக விவாதித்தபடி இருந்தோம். இதை பின்னால் நின்று கவனித்திருக்கிறார் தலைமை ஆசிரியர். விவாத முடிவில், எங்கள் முதுகில் தட்டிக் கொடுத்தார்; ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக செலவிடுவதைப் பாராட்டினார். அத்துடன், அந்த விநாயகர் ஓவியம் பற்றி முழுமையாக விளக்கினார்; மிகவும் மகிழ்ந்தோம்.தற்போது, எனக்கு, 76 வயது. அந்த நிகழ்வு என் வாழ்வில் உன்னதத்தைக் காட்டுகிறது. பள்ளி படிப்பு, குருகுல வாசத்துக்கு சமம் என்பதை உணர்த்துகிறது. அந்த தலைமை ஆசிரியரை மனதில் கொண்டுள்ளேன்.- எ.பி.வி.சுந்தரம், காஞ்சிபுரம்.தொடர்புக்கு: 90429 74679