உள்ளூர் செய்திகள்

இதோ வந்துட்டேன்!

எரிமலை சார்ந்த தீவுகள், 'புதிய தீவுகள்' என அழைக்கப்படுகின்றன. தீவுகள் இரண்டு வகையில் உருவாகின்றன. ஒன்று, பிரதான நிலத்தில் இருந்து துண்டிக்கப்பட்டு விடுவது; மற்றொரு வகை, கடலுக்குள் உருவாகிற எரிமலை மேலேழுந்த நிலையில் கடல் நடுவே பாறைகளும், நிலமும் உருவாவது. முதல் வகைக்கு உதாரணம் மடகாஸ்கர் மற்றும் நியூஸிலாந்து தீவுகள். இரண்டாவது வகைக்கு உதாரணம் கேலபகாஸ் மற்றும் ஹவாய் தீவுகள்.மடகாஸ்கர், நியூஸிலாந்து தீவுகள் தோன்றி இரண்டு கோடி ஆண்டுகள் ஆகின்றன. புதிய தீவுகள் பலவும் எரிமலை சார்ந்தவையாகவே இருக்கின்றன. எரிமலை வெடித்துச் சிதறியபின், அவை வெறும் பாறைக்குவியல்களாகி விடுகின்றன. படிப்படியாக நிலம் உருவாகி தாவரங்கள் வளர்ச்சியடைகின்றன. அங்கே வசிப்பதற்கு விலங்குகள் வந்து சேர்கின்றன.காற்று அல்லது நீரின் மூலம் தாவர விதைகள் அந்தத் தீவு முழுக்கப் பரவுகின்றன.ஆர்க்கிட் செடியின் விதைகள் லேசானவை; காற்றில் பரவிவிடும்.காட்டு முட்செடிகளின் விதைகள் கனமானவை. விதையுடன் உள்ள இறகுக் குடையமைப்பு அது காற்றில் பறந்து செல்ல உதவும். தென்னையின் விதைகள் தேங்காய். அவை ஓட்டுப்பகுதி மூலம் வாட்டர் ப்ரூப் செய்யப்பட்டவை. அவை கடல் நீரில் மிதந்து செல்லும். அத்திப்பழத்தில் விதைகள் உள்ளிருக்கும். விலங்குகள் பழத்தை உண்ணும். பிற்பாடு விலங்குக்கழிவில் விதைகள் வெளியேறி மீண்டும் தாவரங்களாக உருவாகும். ஓ! இப்படித்தான் நீங்க உருவாகுறீங்களா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !