இளஸ்... மனஸ்...
அன்புள்ள ஜெனி ஆன்டி... என்னோட மனசுல இருக்கும் ஆசையை உங்ககிட்ட சொன்னாதான் சரியான தீர்வு கிடைக்கும்னு நான் நம்பறேன். உங்கள் பகுதியை தொடர்ந்து படிச்சிகிட்டு வர்றேன்...ஒவ்வொருவர் பிரச்னைக்கும், அழகா பதில் சொல்றீங்க... என்னோட பிரச்னையை, 'சால்வ்' பண்ணுங்க பார்ப்போம்.மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் வணிகவியல் பிரிவில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறேன். பத்தாம் வகுப்பில் 489 மதிப்பெண்கள் பெற்றேன். எனக்கு குற்றவியல் சட்டம் (Criminal law) பட்டப்படிப்பை வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்பது ஆசை.என் தந்தை கோவில் அர்ச்சகராக உள்ளார். எனக்கு யாராவது 'Sponsors' கிடைத்தால், நன்கு படித்து நம் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன். 'ஹெல்ப்' பண்ணுங்க ஆன்டி.ஹாய் செல்லம்... உன்னோட விருப்பத்தை வரவேற்கிறேன். அதே சமயம், அது என்ன வெளிநாட்டில்தான் போய் படிப்பேன் என்கிறாய். வெளிநாட்டினர் நம் இந்திய நாட்டில் படிப்பதற்காக படையெடுக்கும்போது, உனக்கு நம் நாட்டு கல்வி தரத்தின் அருமை தெரியவில்லையா என்ன?பத்தாம் வகுப்பில் மதிப்பெண் வாங்கியது போலவே, +2 விலும் 1100க்கு மேல் மார்க் வாங்கினால், நீ ஆசைப்பட்ட படிப்பை 'Criminal law' இதைத்தான் 'law Honours'ன்னு சொல்லுவாங்க. சென்னை அடையாரில் உள்ள அம்பேத்கார் சட்ட பல்கலைக் கழகத்தில் இந்த கோர்ஸ் உள்ளது. இது 5 வருட படிப்பு. வருடத்திற்கு 2 லட்ச ரூபாய் பீஸ் கட்ட வேண்டும். முடித்தவுடன் கார்ப்பரேட் கம்பெனிகளில் ஒரு தனி அலுவலகம் கொடுத்து விடுவர். மாத சம்பளம் 5ல் இருந்து 6 லட்சம்வரை கிடைக்கும்.பி.ஏ., ஹிஸ்டரி, வணிகவியல், ஆர்ட்ஸ் க்ரூப் முடித்துவிட்டு பிரைவேட் லா- காலேஜில் சேரலாம். மூன்று வருடங்கள் முடித்தவுடன் சுப்ரீம் கோர்ட், ஹை-கோர்ட் நீதிபதி ஆகும் வாய்ப்புக்கூட உண்டு. நீ நன்கு படித்து மதிப்பெண் வாங்கு. அதன்பிறகு 'Sponsors' கிடைப்பதற்காக செய்தித்தாளில் உதவி கேட்போம். நல்லா படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கும் உன்னை ஆண்டவன் கைவிடமாட்டான். ஜெயித்துக் காட்டு மகளே!உங்கள் நலனில் அக்கறைகொள்ளும்,- ஜெனிபர் பிரேம்.