உள்ளூர் செய்திகள்

இளஸ்... மனஸ்...

என் பெயர் ----..... சிறுவயதிலிருந்தே நான் சிறுவர்மலர் இதழை விரும்பி படிப்பேன். எல்லா பகுதிகளுமே எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் இப்போது வரும், 'இளஸ்-மனஸ்' எனக்கு மிகவும் பிடித்த பகுதி.நான் படிப்பில் மிகவும் சுட்டி. படிப்பு மட்டுமில்லாமல், விளையாட்டு, பொது அறிவு என எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கினேன். பள்ளியிலிருந்து, கல்லூரி படிப்பு வரை நல்ல மதிப்பெண் பெற்று, எப்போதும், ஸ்கூல் பர்ஸ்ட், 'காலேஜ் பர்ஸ்ட்' வாங்கிய மாணவன் நான். ஆசிரியர், குடும்பத்தினர் என எல்லாரும் பாராட்டினர். என்னை மகனாய் பெற்றதை நினைத்து மிகவும் சந்தோஷப்பட்டனர் என் பெற்றோர். ஆனால், இப்போது நான் படும் கஷ்டமோ என்னை எல்லார் முன்னிலையிலும் தலைகுனிய வைக்கிறது. என்னதான் படிப்பில், 'நம்பர் ஒன்' என பெயர் வாங்கினாலும், இன்று வேலையில்லாமல் தவிக்கும் பட்டதாரி நான்.நான் வேலைக்கு வேணும்ன்னு போகாம இருந்தா, அவங்க கேட்குறது நியாயம் தான். மனம் தளராது தினமும் குறைந்தது ஐந்து கம்பெனிக்கு , 'டிரை' பண்றேன்.என்னுடன் ஸ்கூல், காலேஜ்ல, 'ஜஸ்ட் பாஸ்' வாங்கின மாணவர்கள் எல்லாம் இப்போ வேலைக்கு போயி திருமணமும் ஆகி, 'லைப்'பில் செட்டில் ஆகிட்டாங்க. படிப்பில், 'நம்பர் ஒன்' என்ற பெயர் இருந்தாலும், இப்போ நான், 'ஜீரோ'தான். என் பெற்றோர் மிகவும் கவலையில் உள்ளனர். எனக்கு நிம்மதியே இல்லை... நான் என்ன செய்யட்டும் ஆன்டி...ஓ டியர்! உன் நிலைமை என்னை மிகவும் வருத்தப்பட வைக்கிறது. 'படிப்பில் படுசுட்டியான எனக்கு ஏன் இந்த நிலை?' என்று கேட்கிறாய்... சரியான கேள்விதான் மகனே!ஒவ்வொருவருடைய வாழ்க்கையின் உயர்வு, தாழ்வு என்பது அவர்களது பெற்றோர், முற்பிதாக்கள் செய்த பாவ, புண்ணியங்களை பொருத்து அமைகிறது மகனே... மக்கு ப்ளாஸ்த்திரி, சுமாரா படிச்ச மாணவர்கள் கூட சிலசமயங்களில் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கொட்டுவதும், மிகவும் நல்லவர்களுக்கு சரியான வாழ்க்கை அமையாமல் கஷ்டப்படுவதும் இதனால்தான்.ஆனால், ஒன்று மட்டும் தெரிஞ்சிக்கோ... நீ வாழ்க்கை பூரா கஷ்டப்பட்டு, படிச்சி வந்திருக்க... அதற்குரிய பலன் உனக்கு கட்டாயமாக கிடைக்கும். என்ன சற்று லேட்டாகிறது. அவ்ளோதான். ஆனால், 'பெஸ்ட்' ஆக கிடைக்கும்.ரொம்ப, 'பெஸ்ட்' ஆனது வரப்போகுதுன்னா அதுக்கு முன்னாடி நீ பல கஷ்டங்களை அனுபவிச்ச பிறகுதான் அந்த, 'பெஸ்ட்' வரும். அப்போதான் அதன் அருமை உனக்குத் தெரியும்.வாழ்க்கையில், 'பாஸ்ட்'டாக ஓடுறவங்க, உடனுக்குடன் எல்லாமே கிடைக்கப்பெற்றவங்க, எல்லாருமே ஒரு காலகாட்டத்துல அப்படியே, 'ஸ்டக்' ஆகி நின்னுடுவாங்க... அப்போ உனக்கான ஆசிர்வாதத்தின் கதவு திறக்கப்படும்போது எல்லாருமே, 'வாயை' பிளப்பாங்க.'ஓ! இவ்வளவு பெரிய அதிர்ஷ்டத்திற்காகத் தான் இவன் வாழ்க்கையில் இத்தனை கஷ்டங்களா?' என்று. எனவே, சோர்ந்து போகாமல் போராடு. கடவுள் உனக்கென வைத்திருக்கும் அந்த நேரம் வரும்போது நீ மிக மிக உயரமான இடத்தில் இருப்பாய் மகனே! ஸோ, கண்ண துடச்சிகிட்டு சந்தோஷமா இரு. நம்பிக்கைதான் வாழ்க்கை; அதில் சோர்ந்து போகாதே. நடிகர் விக்ரம் மிகவும் கஷ்டப்பட்டு நாற்பது வயசுக்கு மேல் ஒரு கலக்கு கலக்கலயா மகனே...அய்யோ ஆன்டி... அதுக்காக அத்தனை வயசுவரை காத்துகிட்டு இருக்கணுமான்னு கேட்காதே... உனக்கு ஒரு, 'டைம்' வச்சிருப்பார் கடவுள். அந்த நேரம் வரும்வரை சற்று காத்திரு. கடவுள் உன்னை நிச்சயமாகவே ஆசிர்வதிப்பார்.உங்கள் நலனில், அக்கறை கொள்ளும்,ஜெனிபர் பிரேம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !