உள்ளூர் செய்திகள்

செவ்வாழைப்பழம்!

சத்துக்கள் நிறைந்தது வாழை. இதில், பல ரகங்கள் உள்ளன. பூவன், மலைப்பழம், பேயன், கற்பூரவல்லி, பச்சைநாடன், நேந்திரன், கதலி போன்றவை நாட்டு ரகங்கள். கலப்பினத்திலும் பல ரகங்கள் உண்டு. ஒவ்வொன்றும், ஒவ்வொன்றிலும் சத்துக்கள் நிறைந்துள்ளன. சிலவற்றில், உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச் சத்தும், இரும்புச்சத்தும் நிறைந்து காணப்படும். அரிய வகை ரகமான செவ்வாழையில்...* பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது* பொட்டாஷியம் சத்து அதிகம் உள்ளது* முக்கியமான, 'வைட்டமின் - சி' சத்தும் அதிகம் உள்ளது* ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்து காணப்படுகிறது* நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது.பார்வை குறைவு ஏற்பட்டால், தினமும், செவ்வாழைப் பழம் சாப்பிடலாம். பார்வை தெளிவடைய வாய்ப்பு உண்டு. மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவு உணவுக்குப் பின், 40 நாட்கள் செவ்வாழை சாப்பிடலாம். * பாலுடன், செவ்வாழை சாப்பிட, மூல நோய் குணமாகும்* சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கும்* நரம்பு தளர்ச்சியை சரி செய்ய உதவும் * தொற்றுக்கிருமியைக் கொல்லும் சக்தி செவ்வாழைப் பழத்தில் உள்ளது.மருத்துவக் குணங்கள் கொண்ட செவ்வாழையை, கிடைக்கும் போதெல்லாம் சாப்பிடலாம்; உடல் நலத்தை சிறப்பாக பேணும்.ஒரு கப் ஆரஞ்சு பழச்சாறுக்கும், இரண்டு ஆப்பிள் பழங்களுக்கும், இரண்டு அத்திப்பழங்களுக்கும், நான்கு பேரீச்சம் பழங்களுக்கும் சமமான சத்துக்களை கொண்டது ஒரு வாழைப்பழம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !