உள்ளூர் செய்திகள்

தியானம்!

சென்னை, திருநின்றவூர், ஸ்ரீ கிருஷ்ணமூல்சந்த் மகேஸ்வரி விவேகானந்தா வித்யாலயா பள்ளியில், 2005ல், 6ம் வகுப்பு படித்தேன்.அன்று யோகா ஆசிரியை பிரேமா, பிரணாயாமம் சொல்லி கொடுத்தார். சப்பணமிட்டு அமர்ந்தபடி, கண்களை மூடி, 10 நிமிடங்கள் மூச்சை இழுத்து விடச் சொன்னார். அப்படி உட்கார்ந்தாலே என்னை அறியாமல் துாக்கம் வந்து விடும். அன்றும் துாங்கி, இடப்பக்கத்தில் இருந்தவன் மேல் சாய்ந்து விட்டேன்.திடுக்கிட்டவன், 'டீச்சர்... வேதாவிற்கு மயக்கம் வந்து விட்டது...' என கூச்சலிட்டான். விரைந்து வந்து தண்ணீர் தெளித்து, 'என்னாச்சு...' என்று கேட்டார் ஆசிரியை. வகுப்பை மறந்து துாங்கியதாக சொன்னேன். முகத்தை நன்றாக கழுவி வரும்படி கூறினார். பின், வகுப்பு தொடர்ந்தது.என் வயது, 26; தனியார் நிறுவனத்தில், மென்பொருள் இன்ஜினியராக பணிபுரிகிறேன். தினமும் காலை, அந்த ஆசிரியை கற்றுக் கொடுத்த மூச்சு பயிற்சி செய்தபின் தான், அன்றாட அலுவல்களை துவங்குகிறேன். அதற்காக, கண்களை மூடியதும் பள்ளியில் நடந்த அந்த சம்பவம் நினைவில் வந்துவிடுகிறது.- கே.வேதவிஜய், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !