உள்ளூர் செய்திகள்

மைக்கேல் பாரடே!

மின்னாற்றலை உற்பத்தி செய்யும், 'டைனமோ' என்ற கருவியைக் கண்டுபிடித்தவர் மைக்கேல் பாரடே. ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில், 1791ல் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார்.புத்தகம் பைண்ட் செய்யும் நிறுவனத்தில் உதவியாளராகப் பணியை துவங்கினார். அங்கு, அறிவியல் தொடர்பான நுால்களை படித்து அறிவை வளர்த்தார். இங்கிலாந்து வேதியியல் அறிஞர், ஹம்ரி டேவியை மானசீக குருவாக ஏற்றார். அவரது சொற்பொழிவு எங்கு நிகழ்ந்தாலும் தவறாமல் கேட்பார். அவரிடம் உதவியாளராகச் சேர தீர்மானித்தார். அதற்கு ஒரு திட்டம் தீட்டினார். டேவியின் சொற்பொழிவுகளை கவனமாக குறிப்பு எடுத்தார். பின், நோட்டுப் புத்தகத்தில், அழகிய கையெழுத்தில் பதிவு செய்தார். அதை, எழிலாக பைண்ட் செய்து, ஹம்ரி டேவிக்கு அனுப்பி வைத்தார்.இதைக் கண்டு வியப்படைந்தார் ஹம்ரி டேவி. நெகிழ்ச்சியுடன் ஒரு கடிதம் எழுதி மைகேல் பாரடேயை வரவழைத்தார். அவரது விஞ்ஞான ஆர்வத்தைக் கண்டு உதவியாளராக சேர்த்து கொண்டார். முயன்று கற்றுத் தெளிந்தார் பாரடே.கடும் முயற்சியால், மின்னாற்றல் உற்பத்திக்கான டைனமோ கருவியைக் கண்டுப்பிடித்தார். தலைச்சிறந்த விஞ்ஞானியானார். மனித சமுதாயத்துக்கு உதவி புகழ் பெற்றார் பாரடே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !