உள்ளூர் செய்திகள்

சுரங்க ரயில் பாதை!

உலகில் முதல் சுரங்க ரயில் பாதை, ஐரோப்பிய நாடான இங்கிலாந்து, லண்டன் நகரில் அமைக்கப்பட்டது. பூமியை குடைந்து சுரங்கம் அமைத்து ரயில் பாதை, 1863ல் போடப்பட்டது. முதன்முதலில் இதன் வழியாக நீராவியில் இயங்கிய ரயில்கள் சென்றுவந்தன. இப்போது, மின்சார ரயில்கள் ஓடுகின்றன.உலகில் அமெரிக்கா, ரஷ்யாவில் தான் சுரங்க ரயில் பாதைகள் அதிகம் உள்ளன. இவற்றில் ஒன்றரை நிமிடங்களுக்கு, ஒரு ரயில் என்ற கால அளவில் ஓடுகின்றன. இந்தியாவில் முதல் சுரங்க ரயில் பாதை, கோல்கட்டா நகரில் அமைக்கப்பட்டது. உலகில் மிக நீண்ட சுரங்க ரயில் பாதை அமெரிக்கா, நியூயார்க் நகரில் அமைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !