உள்ளூர் செய்திகள்

கடுக்காய் பானம்!

தேவையான பொருட்கள்:கரிசலாங்கண்ணி இலை - 1 கப்கடுக்காய் தோல் - 10பனங்கற்கண்டு, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:கரிசலாங்கண்ணி இலையை நிழலில் உலர்த்தவும்; கடுக்காயில் விதையை நீக்கி, தோலை சுத்தம் செய்யவும். இரண்டையும் சேர்த்து நன்றாக பொடிக்கவும். தண்ணீரை கொதிக்க வைத்து, இந்த பொடியை சிறிதளவு சேர்க்கவும். நன்றாக கொதித்ததும் இறக்கி வடிகட்டி, பனங்கற்கண்டு கலக்கவும். சுவைமிக்க, 'கடுக்காய் பானம்!' தயார்; சூடாகவோ, குளிர வைத்தோ பருகலாம். செலவில்லாத ஆரோக்கிய பானம்; உடல் உஷ்ணத்தை குறைக்கும்; பலவீனம் மறையும்.- எம்.ஏ.நிவேதா, திருச்சி.தொடர்புக்கு: 97503 33265


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !