இந்தியாவின் மிகப் பழைய பள்ளி!
இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் உள்ள பிஷப் காட்டன் பள்ளிதான் இந்தியாவின் முதல் பள்ளி. துவங்கிய ஆண்டு, 1859ம் ஆண்டு ஜூலை 28ம் தேதி!இதை ஸ்தாபித்தவர், பிஷப் ஜார்ஜ் எட்வர்ட் லைன்ச் காட்டன். இந்த பள்ளியில் 3லிருந்து 12வது வகுப்புகள் வரை உள்ளது.இது தங்கிப் படிக்கும் பள்ளியாகும். 2009ல் இதன் 150ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. 500 மாணவர்கள் தங்கி படிக்கின்றனர்.இதன் ஸ்தாபகர் பிஷப் காட்டன்... பின்னாளில் பெங்களூரிலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பள்ளிகளை துவக்கினார்!இதனை டைம்ஸ் ஆப் இந்தியா, அவுட் லுக் உட்பட பல சர்வதேச இதழ்களும் மிகச்சிறந்த தங்கிப் படிக்கும் பள்ளி என இந்த பள்ளியை புகழ்ந்துள்ளன.இந்தியாவின் இரண்டாவது பள்ளி கல்கத்தாவின் கிட்னாப்பூரில் துவக்கப்பட்டது. 1789ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி துவக்கப்பட்ட இந்த பள்ளியின் பெயர் செயின்ட் தாமஸ் பள்ளி.இங்கு கிண்டர் கார்டன் முதல் ஹயர் செகண்டரி வரை உள்ளது. ஆண்/பெண் என இரு பாலரும் படிக்கும் பள்ளி! மாணவ, மாணவியர்களின் மொத்த எண்ணிக்கை 5000!* இந்தியாவின் மிகப் பெரிய சர்வதேச பள்ளி முசோரியில் உள்ளது. ஸ்கூலின் பெயர் வுட் ஸ்டாக்!* இந்தியாவின் பழைய பொது (பப்ளிக்) பள்ளி 1870ம் ஆண்டு ராஜ்காட்டில் துவங்கப்பட்டது. 'தி ராஜ்குமார் ஸ்கூல்' என்பது இதன் பெயர்.அவுட்லுக் இதழ் தேர்ந்தெடுத்துள்ள 8 ஸ்கூல்கள்!1.தூண் ஸ்கூல் - டெக்ராடூன்.2.பிஷப் காட்டன் ஸ்கூல் - பெங்களூரு.3.மதர்ஸ் இன்டர்நேஷனல் - டெல்லி.4.பாம்பே ஸ்காட்டிஷ் - மும்பை.5.லிட்டில் ப்ளவர் ஹைஸ்கூல் - ஹைதராபாத்.6.டி.ஏ.வி.பாய்ஸ் ஸ்கூல் - கோபாலபுரம், சென்னை.7.செயின்ட் சேவியர்ஸ் - காலேஜ் ஸ்கூல் - கல்கத்தா.8.செயின்ட் ஜான்ஸ் ஹைஸ்கூல் - சண்டிகர்.இந்தியாவின் பத்து சூப்பர் பள்ளிகள்!1. அகர்வால் பப்ளிக் ஸ்கூல்: இந்தூர், மத்திய பிரதேசம்.2. அமெரிக்கன் ப்ரன்ட்ஷிப் ரெசிடென்ஷியல் ஸ்கூல் : இந்திராநகர் - பெங்களூரு.3. அம்துல்ஸ் பப்ளிக் ஸ்கூல் நைனிடால் - மாணவர் மட்டும், உத்தரகாண்ட்.4. அன்ஜுமன் - இஸ்லாம் - மாணவர்கள் மட்டும், - பைகுல்லா, மும்பை.5. ஆர்மி பப்ளிக் ஸ்கூல் - இரு பாலர் பள்ளி, தக்சய்சோலன், இமாச்சல் பிரதேசம்.6. பெங்களூர் மிலிட்டரி ஸ்கூல் - மாணவர்கள் மட்டும், - ரிச்மண்ட் டவுன், பெங்களூரு.7. பாரதிய வித்யா பவன் இன்டர் நேஷனல் ரெசிடென்ஷியல் பப்ளிக் ஸ்கூல் - இருபாலர் பள்ளி, வித்யாஸ்ரமம், பீமாவரம், ஆந்திரா.8. பிஷப் காட்டன் ஸ்கூல் - மாணவர்கள் மட்டும், சிம்லா, இமாசல்பிரதேசம்.9. ஜி.டி.பிர்லா மெமோரியல் ஸ்கூல், ராணிகேட் - உத்ரகாண்ட்.10 ஹன்ராஜ் மொரார்ஜி பப்ளிக் ஸ்கூல் - மாணவர்கள் மட்டும், அந்தேரி, மும்பை.- ராஜி ராதா.