உள்ளூர் செய்திகள்

உத்தரவும் செயலும்!

திருவள்ளூர், மா.க.வி.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 2014ல், 6ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...வகுப்பாசிரியை ஜெயந்தி, தமிழாசிரியையாகவும் இருந்தார்; மிகவும் கண்டிப்பானவர். தினமும் காலை, 9:30 மணிக்கு வகுப்பில் சிறுத்தேர்வு நடத்துவார். அன்றும் அதுபோல நடைபெற்றது. ஒவ்வொரு கேள்வியாக ஆசிரியை வாசிக்க, விடை எழுதினோம். தேர்வு முடிந்ததும் இறை வழிபாடு கூட்டத்திற்குச் சென்றோம். அன்றைய கூட்டத்திற்கு, எங்கள் வகுப்பு தான் பொறுப்பு. என்னை அழைத்த ஆசிரியை, 'நீதி போதிக்கும் சிறுகதை ஒன்று சொல்...' என்றார். எனக்கு, 'திக்' என்றது. அதுவரை மேடை ஏறி பழக்கம் இல்லை. முடியாது என்று சொல்லவும் மனமில்லை.ஒப்புக் கொண்டு, நேராக தலைமை ஆசிரியர் அறைக்கு சென்றேன். அன்று வெளியான சிறுவர்மலர் இதழை தேடி எடுத்து வந்து மேடை ஏறினேன். அந்த இதழை பார்த்து, கதையை கூறி முடித்தேன். கைத்தட்டல் ஒலி காதை பிளந்தது.இந்த வாய்ப்பை நல்கிய அந்த ஆசிரியருக்கும், அதை செயலாக்க உதவிய, 'சிறுவர்மலர்' இதழுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இப்போது என் வயது, 17; இன்றும் வகுப்பறையில் நான் தான் நீதிக்கதை சொல்கிறேன். ஒவ்வொரு கதை முடிவிலும், கைதட்டல் ஒலியைக் கேட்டு மகிழ்கிறேன்.- ரா.உதயகுமார், திருவள்ளூர்.தொடர்புக்கு: 63695 74531


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !