உள்ளூர் செய்திகள்

தத்துவக் கதை!

ஒருமுறை ஒரு புகழ் பெற்ற துறவியை பணக்காரன் ஒருவன் சந்தித்தான். அவரிடம் ''உங்களுடைய அன்றாடச் செயல்முறைகள் பற்றிக் கூறுங்கள்,'' என்று கேட்டார்.''அது ரொம்ப சாதாரணம். பசி வந்தால் சாப்பிடுவேன்; தூக்கம் வந்தால் தூங்குவேன் அவ்வளவு தான்,'' என்றார்.குருவானவரின் வாழ்க்கை அனுபவத்தை கொண்டு பல காரியங்களை கற்றுக் கொள்ளலாம் என நினைத்த பணக்காரனும், அவனது நண்பர்களும் 'சப்' என்று உணர்ந்தனர். அதனால், ''உங்கள் செயல்கள் அவ்வளவுதானா? அதில் தனித்தன்மை ஏதும் இருப்பதாய் தெரியவில்லையே! எல்லா மனிதர்களும் சாப்பிடறோம்... தூங்குகிறோம்... இதில் தனித்தன்மை என்ன இருக்கிறது?''''உங்களுடைய செயல் முறையும் எனது செயல்முறையும் ஒன்றாகி விடாது. நீங்கள் சாப்பிடும் போது உங்களுடைய வியாபாரத்தைப் பற்றி எண்ணமிடுவீர்கள். உறங்கும்போது கனவு காண்பீர்கள் அல்லது உறக்கம் பிடிக்காமல் தவிப்பீர்கள். நானோ உண்ணு கிறபோது உணவில் மட்டுமே கவனமாயி ருப்பேன். என்னால் சுவைத்து உண்ண முடிகிறது. உறங்கும்போது எந்தக் கவலையும் இல்லாமல் அமைதியாய் உறங்க முடிகிறது. எதைச் செய்தாலும் அதுவாக மாறிவிடுவது என் இயல்பு.'' என்றார்.அவ்வளவு பணம் சம்பாதித்திருந்தும் தன்னால் நினைத்ததை விரும்பி உண்ண முடியாத நிலை. பஞ்சு மெத்தையில் படுத்தும் தூக்கம் வராத நிலையை எண்ணி நொந்து போனான் பணக்காரன்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !