அன்னாசி பழ பாயாசம்!
தேவையான பொருட்கள்:அன்னாசி பழம் - 1பால் - 500 மி.லி.,சர்க்கரை - 100 கிராம்சேமியா - 25 கிராம்ஜவ்வரிசி - 25 கிராம்முந்திரி, திராட்சை - தலா 10 கிராம்ஏலக்காய் - 5.செய்முறை:அன்னாசி பழத்தை தோல் நீக்கி, சிறிய துண்டுகளாக்கி அரைத்து சாறை வடிகட்டவும். அதை, பாலுடன் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். அதனுடன், சேமியா, ஜவ்வரிசி, முந்திரி பருப்பு, திராட்சை, ஏலக்காய் பொடி, சர்க்கரையை கலந்து கொதிக்க விட்டு இறக்கவும்.சூடான, 'அன்னாசி பழ பாயாசம்' தயார். குளிர்சாதன பெட்டியில் வைத்தும் அருந்தலாம். நெஞ்சு சளியை கரைக்கும்; ஆஸ்துமா போன்ற உபாதைகள் வராமல் தடுக்கும்!- என்.ஜெ.கனகேஷ்வரி, திருப்பூர்.தொடர்புக்கு: 93641 56047