உள்ளூர் செய்திகள்

முள் முருங்கை வடை!

தேவையான பொருட்கள்:முள் முருங்கை இலை - 15இட்லி அரிசி - 100 கிராம்வெள்ளை உளுந்து - 25 கிராம்உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை:முள் முருங்கை இலைகளை, நன்கு சுத்தம் செய்து, நடு நரம்பை நீக்கவும். அவற்றுடன், ஊற வைத்த உளுந்து, அரிசி, தேவையான உப்பு போட்டு, வடை பதத்திற்கு அரைக்கவும். அரைத்த மாவில், அதிக ஈரப்பதம் இருந்தால், சிறிது அரிசி மாவு கலக்கலாம். அந்த மாவை, சிறு வடைகளாக தட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.சுவைமிக்க, 'முள் முருங்கை வடை' தயார். சிறுவர், சிறுமியர் விரும்பி உண்பர். இருமல், சளியைப் போக்கும்; குடற்புழுக்களை நீக்கும்.- ஜே.கமலம், திருநெல்வேலி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !