அடியொற்றி...
சென்னை, மேற்கு மாம்பலம், அரசு மேல்நிலைப் பள்ளியில், 1990ல், 7ம் வகுப்பு படித்த போது, கணித ஆசிரியராக இருந்தார் வெங்கட்டராமன். அந்த காலத்தில் பள்ளியில் கணக்கு பாடத்தில் மட்டும் தான் முழுமையாக மதிப்பெண் வாங்க முடியும். மாணவ, மாணவியர் பயிற்சி பெற வசதியாக வாரந்தோறும் சிறப்பு தேர்வுகள் நடத்தி ஊக்குவிப்பார்.ஒருநாள் பாடம் நடத்திய போது, 'வாழ்க்கையில் சிறு விஷயத்தை கூட அலட்சியப்படுத்த கூடாது. தேர்வில் சில கேள்விகளுக்கு ஒரு மதிப்பெண் தானே என விடை எழுதாமல் தவற விடக்கூடாது. கட்டணத்தில் சிறிது குறைத்து கொடுத்தாலும் ரயில், பேருந்துகளில் பயணச்சீட்டு தருவார்களா... அதுபோல சிறிய விஷயங்களை தவறவிட்டால், லட்சியத்தை அடைய இயலாமல் போகலாம்...' என அறிவுரை வழங்கினார்.அதன்படி, கடின உழைப்பின் பலனை, பிளஸ் 2 தேர்வு முடிந்த போது உணர்ந்தேன்.எனக்கு, 43 வயதாகிறது. இல்லத்தரசியாக இருக்கிறேன். அந்த நிகழ்வு, பல ஆண்டுகளுக்கு முன் நடந்த போதும், மனதில் தங்கியுள்ளது. அந்த ஆசிரியர் அடியொற்றி என் குழந்தைகளுக்கும் அறிவுரை கூறுகிறேன். அவரை பின்பற்றி வாழ்வை அமைத்துள்ளேன்.- லட்சுமி கணேசன், சென்னை.தொடர்புக்கு: 97907 31241