உள்ளூர் செய்திகள்

செய்து பாருங்கள்! - செர்ரி... செர்ரி...

தேவைப்படும் பொருட்கள்: பெட்ரோலியம் ஜெல்லி (வாசிலைன்), பேஸ்ட்ரி போர்ட், ஒரு மர உருளை, கத்தி, ஸ்ட்ரா, சிசர்ஸ், க்ளூ, கிட்சன் டவல், மஞ்சள், சிகப்பு மற்றும் பச்சை நிற அக்ரிலிக் பெயின்ட், சிறிய மரக்குச்சிகள்.இப்போது செய்யலாமா?1. ஒரு சிறிய கிண்ணத்தை தலைகீழகாக கவிழ்த்து பெட்ரோலியம் ஜெல்லியை அதன் மீது தடவவும். அப்போதுதான் 'க்ளே'யை நாம் வைத்து எடுக்கும்போது ஒட்டாமல் வந்துவிடும்.2. இப்போது பேஸ்ட்ரி போர்டின் மேல் 'க்ளே'யை வைத்து மர உருளையை அதன் மீது வைத்து உருட்டி 5 மி.மீட்டர் கணத்திற்கு ஆக்கவும். பின், இதனை சிறிய கிண்ணத்தின் மீது வைத்து அதன் விளிம்பு வரை கைகளால் நன்கு அழுத்திவிடவும். விளிம்புக்கு வெளியே உள்ள 'க்ளே'யை கட் செய்து எடுத்து விடவும்.3. 'க்ளே'யை கிண்ணத்தில் இருந்து பிரித்து எடுத்து அதன் விளிம்புகளில் ஸ்டராவை பயன்படுத்தி ஓட்டைகள் போடவும்.4. படத்தில் காட்டியுள்ளவாறு க்ளேயை சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி பின் ஒரு பக்கம் அழுத்தி செர்ரி பழ வடிவத்தில் மாற்றவும்.5. சிறிய மரக்குச்சிகளை இந்த உருண்டைகளில் தலைப்பகுதியில் செருகி நன்கு உலர விடவும்.6. கிட்சன் டவலை பயன்படுத்தி கிண்ணத்தில் ஒட்டியிருக்கும் பெட்ரோலியம் ஜெல்லியை நன்றாக துடைக்கவும். பின், க்ளூவை பயன்படுத்தி செர்ரிபழ வடிவில் உள்ள க்ளேயின் குச்சியை கிண்ணத்தில் உள்ள ஓட்டைகளுடன் இணைக்கவும்.7. கிண்ணத்தை உங்களுக்கு பிடித்த வண்ணத்திலும், செர்ரிபழ வடிவ உருண்டைகளை வெவ்வேறு வண்ணங்களிலும் அழகாக வண்ணம் தீட்டி உலர விடுங்கள். இப்போது அழகிய கலர்புல் செர்ரி கிண்ணம் தயார்.உங்க ஷோகேசில் வைத்து அழகுபடுத்துங்க குட்டீஸ்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !