உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 65; விவசாயம் மற்றும் மூலிகை வைத்தியம் செய்து வருகிறேன். மகளிர் குழு, பள்ளி, கல்லுாரிகளில் குழந்தைகள் நலம் தொடர்பாக பயிற்சியும் அளித்து வருகிறேன். சிறுவர்மலர் இதழை, பல ஆண்டுகளாக, வாசித்து வருகிறேன். பயிற்சிகளின் போது, சிறுவர்மலர் இதழில் வரும் தகவல்களைச் சுட்டிக்காட்டி பேசுவேன். அரசு அதிகாரிகளுக்கும் இதன் மேன்மையைப் புரிய வைப்பேன். சிறுவர்மலர் இதழ் வெளி வந்தவுடன், என் பேரனுக்கு கொடுக்க வேண்டும். தவறினால், கராத்தே சண்டை போடுவது போல் வம்புக்கு இழுப்பான். எதிர்கால சமுதாயத்தை நல்வழிபடுத்தி வரும், சிறுவர்மலர் இதழுக்கு வாழ்த்துகள்!- ஜி.விஜயன், புதுச்சேரி.தொடர்புக்கு: 94432 91422


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !