வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 53; கடந்த, 25 ஆண்டுகளாக தினமலர் நாளிதழ் படிக்கும் தீவிர வாசகி; சிறுவர்மலர் வரவை எதிர்பார்த்து வாசலில் தவம் கிடப்பேன். அதை படித்தபடியே, பருகினால் தான், தேநீர் ருசிக்கிறது. அங்குராசுவின் பயனுள்ள தகவல்கள் காலத்துக்கும் போற்றி பாதுகாக்க தக்கதாக உள்ளன.விலா நோக சிரிக்க வைக்கும், 'மொக்க ஜோக்ஸ்!' மனதிற்கு இதம் தரும் அருமருந்து. குட்டி குட்டி மலர்களின் மழலை முகங்கள் மகிழ்ச்சி தருகின்றன. பிஞ்சு கரங்கள் வரைந்த அசத்தல் ஓவியங்கள் பாராட்டத் தக்கது.போற்றுதலுக்குரிய, 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!' இல்லத்தரசிகளுக்கு உதவுகிறது. இளமைக்கால நினைவுகளை வெளிக்கொணரும், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி, இன்றைய மாணவர்களை நெறிப்படுத்த உதவும். சிறுகதைப் பகுதிகளை என் வீட்டு நுாலகத்தில் பாதுகாக்கிறேன்.'இளஸ் மனஸ்!' பகுதியில் அறிவுரை தரும் தாய்மை உணர்வுள்ள பிளாரன்சுக்கு, 'சூப்பர் சல்யூட்!' அனைவரும் விரும்பும் நறுமண மலர் எட்டுத்திக்கும் மணக்க வாழ்த்துகள்!- த.கலா, தேனி.தொடர்புக்கு: 94888 56393