வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 55; வாரந்தோறும், 'சனிக்கிழமை எப்போது வரும்... நாளிதழ் போடும் பையன் வருகிறானா...' என எதிர்பார்த்திருப்பேன். சிறுவர்மலர் இதழ், முகம் மலர்வதைப் பார்த்தால் தான் நிம்மதி அடையும் மனம். இது போன்று எதிர்பார்ப்புடன், ஒரு சனிக்கிழமை காலை உணவு தயாரித்துக் கொண்டிருந்தேன்; நாளிதழ் பையனின் மிதிவண்டி மணி ஒலிக் கேட்டது. ஆர்வத்தில் அடுப்பை அணைக்காமல் அவனைத் தேடி சென்று விட்டேன். தாமதத்துக்கான காரணத்தை விசாரித்து, சிறுவர்மலர் இதழுடன் திரும்பினேன்.ஏதோ கருகும் வாடை அடித்தது; போய் பார்த்தால், உணவு கருகி இருந்தது. அடுப்பை நிறுத்தி, ஆர்வமுடன் சிறுவர்மலர் படிக்க ஆரம்பித்தேன். பூமிக்கு தான் ஈர்ப்பு சக்தி இருக்கிறது என்று எண்ணிய எனக்கு, சிறுவர் முதல் பெரியவர் வரை ஈர்க்கும் சக்தியை சிறுவர்மலர் இதழும் கொண்டுள்ளது என புரிந்து கொண்டேன். மேன்மேலும் சிறுவர்மலர் வளர வாழ்த்துகிறேன்.- வி.அலமேலு, கடலுார்.