வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 55; தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறேன். கடந்த, 25 ஆண்டுகளாக சிறுவர்மலர் இதழை படித்து வருகிறேன். பத்திரிகை உலகில் எத்தனையோ புத்தகங்கள், இணை மலராக வந்தாலும், அத்தனைக்கும் நடுவில் புதுமை படைக்கிறது சிறுவர்மலர். பள்ளிப்பருவத்தை கண்முன்னே காட்டும், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி, தொடர்கதை, சித்திரக்கதை, நீதிக்கதை என அறிவை புடம்போடும் பக்கங்கள் நிறைந்துள்ளது.கவலை மறந்து சிரிக்க, 'மொக்க ஜோக்ஸ்!' பகுதி, சந்தேகத்திற்கு மருந்து போடும், 'இளஸ் மனஸ்!' பகுதி, சிறுவர், சிறுமியர் அறிவை கூர்தீட்டும் உரைகல்லாய், 'புதிர்!' போட்டி, ஓவிய போட்டி, அங்குராசு என்ற அதிமேதாவியின் அற்புத பொது அறிவு தொகுப்பு, சத்தான சமையல் குறிப்பு என, பன்முகத்தன்மையுடன் மலர்கிறது சிறுவர்மலர்!அனைவரையும் கவர்ந்திழுக்கும் சிந்தனை பெட்டகத்தின் சீரிய அறிவுப்பணி, மேலும் சிறக்க மனபூர்வமான வாழ்த்துகள்!- எஸ்.மரகதவல்லி, விருதுநகர்.