வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 60; பல ஆண்டுகளாக, சிறுவர்மலர் இதழை படித்து வருகிறேன். அதன் தீவிர வாசகி என்பதில் பெருமை கொள்கிறேன்.நான் பணியாற்றியது மெட்ரிக் பள்ளி; ஆங்கில வழிக்கல்வி என்பதால், நீதி போதனை வகுப்புகளில், சிறுவர்மலர் கதைகளை ஆங்கிலத்தில், எளிய முறையில் மொழி பெயர்த்து, மாணவர்களுக்குக் கூறுவேன். அதனால், பெற்றோரின் அன்பையும், ஆதரவையும் பெற்றேன்.சிறுவர்மலர் இதழில் வரும், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி, என் பள்ளி வாழ்க்கையின் பசுமையான நாட்களை ஞாபகப்படுத்துகின்றன. அந்த மலரும் நினைவுகளால், மனம் மகிழ்ச்சியடைகிறது; செயல் சுறுசுறுப்படைகிறது.ஓவியத்தால், 'உங்கள் பக்கம்!' பகுதியை மெருகூட்டும் குழந்தைகள், ரவிவர்மாக்களாக தெரிகின்றனர். வரலாற்று நிகழ்வுகளும், அறிவியல் தொடர்பான கட்டுரைகளும், அங்குராசு சொல்லும் தகவல்களும் அறிவை வளர்க்கும் களஞ்சியங்களாக உள்ளன. சிந்தனையைத் துாண்டுகிறது, சிறுவர்மலர் என்பதில் ஐயம் இல்லை!- பொன்.ஜானகி, திருப்பூர்.தொடர்புக்கு: 94426 31781