உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 64; வங்கி மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். நன்றாக பாடும் திறமை உண்டு. பாடியவற்றை, 'யுடியூப்' சேனலில் பதிவேற்றம் செய்து வருகிறேன். இந்த பணிகளுக்காக, நண்பர்கள் வீட்டுக்கு அடிக்கடி செல்வது வழக்கம்.ஒரு நண்பரின் ஓவிய அறையில், சிறுவர்மலர் இதழைக் கண்டேன். விசாரித்ததில், குழந்தைகள் விரும்பி படிப்பதாக கூறினர். ஆர்வத்துடன் எடுத்து புரட்டினேன். கவரும் வகையில் இருந்ததால் வாசிக்க ஆரம்பித்தேன். ஸ்கூல் கேம்பஸ், ஜோக்ஸ்கள், சிறுகதை, அங்குராசு பகுதி என, எல்லாம் சுவாரசியம். எளிய நடையில், சுலபமாக வாசிக்க முடிகிறது. தகவல்கள் மனதில் தங்குகின்றன. இனிய வாசிப்பு அனுபவம் தந்து மகிழ்விக்கும் சிறுவர்மலர் இதழுக்கு கோடான கோடி நன்றிகள்!- எஸ்.கிருஷ்ணகுமார், சென்னை.தொடர்புக்கு: 94423 78707


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !