வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 74; தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். தினமலர் நாளிதழை நீண்ட காலமாக படித்து வருகிறேன். ஒவ்வொரு வாரமும் சிறுவர்மலர் இதழின் அனைத்து பகுதிகளையும் வாசித்தால் தான், மனம் திருப்தி அடையும். மலரும் நினைவுகளாக, 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி, சிறுவர்களை மகிழ்விக்கும்-, 'உங்கள் பக்கம்!' ஓவியங்கள், சிறுகதைகள், அறிவியல் கருத்துக்களை அறிவுபூர்வமாக கூறும், 'அதிமேதாவி அங்குராசு!' கட்டுரை மற்றும் மகளிரை மகிழ்விக்கும், 'மம்மீஸ் ெஹல்த்தி கிச்சன்!' என, உயிரூட்டமுடன் அசத்துகிறது. மாணவ, மாணவியர் சந்தேகங்களுக்கு, 'இளஸ்... மனஸ்...' பகுதியில் தரும் பதில்கள் சிறப்பானது.இதை எல்லாம் என் பேரக்குழந்தைகளிடம் எடுத்து சொல்லி, சிறுவர்மலர் இதழை படிக்க வைக்கிறேன். நண்பர்களிடமும் அறிவுறுத்துகிறேன். என் பள்ளி வளாக அனுபவ கடிதம், 'ஜீவநதி!' என்ற தலைப்பில் பிரசுரமானது. அதைக் கண்டதும், உடன் படித்த நண்பர்களின் அலைபேசி அழைப்புகளால் தொடர்புகள் கிடைத்தன. இது தவிர கணக்கற்ற அழைப்புகள் வந்தன. அவை, அன்பை பறிமாறி திக்கு முக்காடச் செய்து விட்டன.இந்த மகிழ்ச்சிக்கு வழிவகுத்த சிறுவர்மலர் இதழுக்கு கோடான கோடி நன்றிகள்!- எஸ்.நல்லதம்பி, திண்டுக்கல்.