உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது 64; தபால்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றே ன். பல ஆண்டுகளாக சிறுவர்மலர் இதழை படிக்கிறேன். என் மகன், மகள், பேத்தி என குடும்பத்தில் அனைவரும் தவறாது வாசித்து மகிழ்கின்றனர். வாழ்வின் முன்னேற்றப்பாதையை நினைவூட்டும், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதியில் வெளியாகும் கடிதங்கள், சிறுவர், பெரியவர் என அனைவருக்கும் நம்பிக்கையை வாரி வழங்குகின்றன. சுவையான உணவை தவறாது அறிமுகம் செய்யும், 'மம்மீஸ் ெஹல்த் கிச்சன்!' அபாரம். சிறுவர், சிறுமியரின் ஓவிய திறனை ஊக்குவிக்க, 'மழலையர் பக்கம்!' பகுதி ஒரு வரப்பிரசாதம். சிறுகதை, தொடர்கதை, இளஸ் மனஸ்!, அதிமேதாவி அங்குராசு கட்டுரைகள், மொக்க ஜோக்ஸ் என சுவை மிக்க பகுதிகளை வழங்குவதில் சிறுவர்மலர் இதழுக்கு நிகர் வேறு எதுவும் இல்லை. குழந்தைகளின் அழகிய முகங்களை காட்டும், 'குட்டி குட்டி மலர்கள்!' மனதை நெகிழ வைக்கிறது. அட்டை டூ அட்டை கவரும் சிறுவர்மலர் சேவை தொடர வாழ்த்துகிறேன். - கே.பி.மனோகரன், கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !