அக்டோபர் மாதம் வந்தாலே....
அக்டோபர் மாதம் முழுவதும் விசேஷித்த தினமாக கொண்டாடப்படுகிறது குட்டீஸ்... அவற்றில் சிலவற்றை பார்ப்போமா?அக்டோபர் 1: இத்தேதியை வயதான நபர்களின் சர்வதேச தினமாக கொண்டாடு கிறோம்.இன்று உலகம் முழுவதும் 60 வயதை கடந்தவர்கள் 600 மில்லியன் பேர் உள்ளனர். இது 2025க்குள் இரண்டு மடங்காக அதிகரிக்கும்.ஐ.நா. தான்... இந்த நாளை இப்படி கொண்டாட வேண்டும் என அறிவித்துள்ளது. அவர்களின் சேவைகளை நினைவு கூறுவதுடன், அவர்கள் நிம்மதியாக இருக்க இடஞ்சல் ஆக இருப்பவை எவை எனவும் ஆய்வு செய்கிறது. முதியவர்களை மதிப்போம்.அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி!அக்டோபர் 5 - உலக ஆசிரியர் தினம்!அக்டோபர் 9 - உலக தபால் தினம்!இ-மெயில், எஸ்.எம்.எஸ்., எல்லாம் சகஜமான பின்பும், இன்றும், தபால்காரர் நம் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறார்.<<உலகம் முழுவதும் 6 லட்சம் தபால் நிலையங் கள் உள்ளன. ஒரு நாட்டின் சரித்திரத்திலும், முன்னேற்றத்திலும் தபால் சேவைக்கு முக்கிய பங்கு உண்டு.இதனால் மக்கள், இவர்கள் சேவையை உணர்ந்து கொண்டாடும் விதமாக அக்டோபர் 9ம் தேதியை உலக தபால் தினமாக ஐ.நா., அறிவித்தது.அக்டோபர் 10 - உலக மன ஆரோக்கிய மனம்!உலகம் முழுவதும் மனம் சார்ந்த சிக்கல்கள் பற்றி ஆய்வு செய்து மக்களிடம் அது சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஏதுவாய் ஐ.நா., அக்டோபர் 10ம் தேதியை உலக மன ஆரோக்கிய தினமாக அறிவித்தது.மனம், ஆரோக்கியமாக இருந்தால்தான் சுறுசுறுப்பாக செயல்பட்டு தனக்கும், சமுதாயத்திற்கும் நல்லது செய்து கொள்ள முடியும்.இன்று இந்த உலக மன ஆரோக்கிய தினம் உலகம் முழுவதும் 150க்கும் அதிகமான நாடுகளில் கொண்டாடப் பட்டு, அது சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.அக்டோபர் 11- சர்வதேச பெண் குழந்தைகள் தினம்!இன்றும் உலகின் பல நாடுகளில் ஆண்களுக்கு சமமாக பெண்கள் நடத்தப்படுவதில்லை. சமுதாயத்தில் பாரபட்சத்துடன் நடத்தப்படுவதுடன்... பலாத்காரங்களுக்கும் உட்பட வேண்டி யுள்ளது. இந்தியாவில் பல கிராமங்களில் இன்றும் பெண் குழந்தை பிறந்தால், கள்ளிப் பால் கொடுத்து கொன்று விடு கின்றனர்! ஆக, பெண் குழந்தைகளுக்கு முறையான கவனிப்பு, படிப்பு, அந்தஸ்து கிடைக்க வேண்டுமானால் இந்நாள் கொண்டாடப்பட்டே ஆக வேண்டும்.அக்டோபர் 16 - உலக உணவு தினம்! உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா குட்டீஸ்?நீங்கள் சுலபமாக, எவ்வளவு உணவை வேஸ்ட் பண்றீங்க... ஆனால், உலகில் 842 மில்லியன் பசி கொண்ட மக்கள் வாழ்கின்றனர். 1945ம் ஆண்டு இந்த தினத்தில்தான், ஐ.நா., உணவு மற்றும் விவசாய இயக்கத்தை துவக்கியது. ஆக, இந்த தினத்தில், உணவை வேஸ்ட் செய்யலாகாது; மாறாக, பசியோடு இருப்பவர்களுக்கு அவை அளிக்கப்பட வேண்டும் போன்ற சிந்தனைகளை குழந்தைகளிடம் ஊட்டுகிறோம்! பசி மற்றும் ஊட்டச் சத்து குறைபாட்டிற்கு எதிராக பெரிய அளவில் பிரசாரம் செய்ய இந்த தினம் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.அக்டோபர் 17 - ஏழ்மையை விரட்டியடிக்கும் சர்வதேச தினம்!உலகில் தினமும் ஏராளமான மக்கள் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் இருக்கின்றனர். இவர்களுக்கு உணவும், இருக்க இடமும் இல்லை. அடிப்படை வசதிகள் கூட கிடைப்ப தில்லை. இவற்றை சுட்டிக் காட்டி, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவரும் நல்வாழ்வு வாழ ஏதுவாய் அக்டோபர் 17ம் தேதியை ஏழ்மையை விரட்டும் சர்வதேச தினமாக ஐ.நா., கொண்டாடுகிறது. ஏழ்மையை விரட்ட கல்வி மற்றும் வேலை வாய்ப்பை அதிரிக்க வேண்டும்!அக்டோபர் 24 - ஐ.நா. தினம்!1945ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி ஐ.நா., பிறந்தது. அதன் மூலம் உலக நாடுகள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் வந்தது. அத்துடன் உலகம் முழுவதும் அமைதிக்கும், திட்டமிட்ட முன்னேற்றத் திற்கும், சம உரிமை கிடைப்பதற்கும் அது போராடி வருகிறது. ஆக அதன் பிறந்த நாளை கொண்டாடுவது பொருத்தமே!- கட்டுரை, திலிப்.