உள்ளூர் செய்திகள்

கவலை பிசாசே... ஓடிப்போ என்னை விட்டு!

நீங்கள் ரொம்ப கவலைப்படுவரா? அற்ப விஷயங்களுக்கெல்லாம், 'வடபோச்சே'ன்னு நினைக்கிறவரா நீங்கள்? கவலையை மறப்பதற்காக நிறைய துாக்க மாத்திரையை விழுங்குவது, அமெரிக்கர்கள் மத்தியில் இப்போது அதிகரித்து வருகிறது. அதையும், 'பேஷன்' என்ற பெயரில் நம்மாளுங்க, 'பாலோ'பண்ணாமல் இருந்தா சரிதான்.உங்களுடைய எதிரியே கவலைதான். காரணம், அது உங்களை அழித்துவிடும் சக்தி கொண்டது தெரியுமா? கவலை உங்கள் ரத்த ஓட்டத்தையும், நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது.சைக்கலாஜிஸ்ட் கூற்றுப்படி, 40 சதவீத கவலைகள் ஏற்கனவே ஏற்பட்டுவிட்டன. 12 சதவீதக் கவலைகள் நம் உடல்நலன் குறித்து உண்டாகின்றன. 10 சதவீதக் கவலைகள், ஒன்றுமில்லாத வெற்றுப் பிரச்னைக்காக உருவாகின்றன. 8 சதவீதக் கவலைகள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஒன்றுமில்லாத சாதாரண விஷயங்களுக்காக, 92 சதவீதக் காலம் கவலைப்படுகின்றனர்.எனவே, கவலைப்படுவதைக் குறைத்து, செயல்படுவதை அதிகமாக்குங்கள். இந்த, 'கவலைப பிசாசு' உங்களையே அழித்துவிடும் தன்மை கொண்டது. எனவே, அதை முதலிலேயே விரட்டி விடுங்க... எது நடந்தாலும், 'நடப்பது எல்லாமே நன்மைக்கே' என்று நினைங்க... இந்தக் கவலை பிசாசு உங்களை விட்டு ஓடிப்போகும். ஹேப்பியா இருங்க!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !