உள்ளூர் செய்திகள்

மலைகளுக்கு அடியில் ஓர் அழகிய கிராமம்!

உலகின் அழகான நாடுகளில் ஒன்று, ஸ்பெயின். இங்கு, காடீச் மாகாணத்தில் உள்ள, ஸ்டெனில் டி லாஸ் என்ற கிராமத்துக்கு சென்றால், அசந்து விடுவீர்கள். உலகின் ஒட்டு மொத்த அழகையும், குத்தகைக்கு எடுத்ததைப் போன்றிருக்கிறது இந்த கிராமம். இங்குள்ள அனைத்து வீடுகளுமே, பிரமாண்டமான மலைத் தொடருக்கு கீழ் அமைந்துள்ளன. மலையை குடைந்து, அதற்கு அடியில், வீடுகளை கட்டியுள்ளனர்.பெரும்பாலான வீடுகளின் பின்பக்க சுவர்கள், மலைகளால் ஆனவை என்பது கூடுதல் தகவல். காசும், நேரமும் இருந்தால், இந்த கிராமத்துக்கு ஒரு நடை, போய் வாருங்களேன்!— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !