ரசிகர்களை கவர்ந்த, மிஸ்டர் பீன்!
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் ரோவன் அட்கின்சன்; இவர், கடந்த, 25 ஆண்டுகளாக ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார். 'மிஸ்டர் பீன்' என்ற கதாபாத்திரத்தில் இவர் தோன்றினால், சிரிக்கத் தெரியாதவர்கள் கூட சிரிப்பர். அப்பாவியாகவும், மந்த புத்தியாகவும் அவர் செய்யும் சேட்டைகள், சிறந்த நகைச்சுவை காட்சிகளாகி விடும். முதன் முதலாக, 1990ல், 'மிஸ்டர் பீன்' என்ற கதாபாத்திரமாக, 'டிவி'யில் தோன்றினார். இன்று, உலகில் அதிக ரசிகர்களை பெற்ற நடிகர் என்ற பெருமைக்கு உரியவராக உள்ளார்.— ஜோல்னா பையன்