உள்ளூர் செய்திகள்

தங்க கூண்டில் சிக்கிய கிளி!

சமீபத்தில், பிரிட்டன் இளவரசர் ஹாரியை திருமணம் செய்த, ஹாலிவுட் நடிகை மெகன் மார்கெல்லின் நிலை, மிகவும் பரிதாபமாக உள்ளது. பிரபலமான நடிகையாக, சுதந்திரமாக வலம் வந்த மெகன், தற்போது, தங்கக் கூண்டில் அடைத்த கிளியை போல் இருக்கிறார்.பிரிட்டன் அரச குடும்பம், மெகனுக்கு, 17 கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.'செல்பி' எடுக்கக் கூடாது, ஆட்டோகிராப் போடக்கூடாது, அடர் நிறம் உடைய, 'நெய்ல் பாலீஷ்' போடக் கூடாது, குட்டைப் பாவாடை அணியக் கூடாது, பொது இடங்களில், கால் மேல் கால் போட்டு அமரக் கூடாது என்பது உள்ளிட்ட, அந்த நிபந்னைகளால், கடும் கலக்கம் அடைந்துள்ளார், மெகன்.மறைந்த, இளவரசி டயானா வாழ்வில் நடந்தது போன்ற சம்பவங்கள், அரச குடும்பத்தில் மீண்டும் நடந்து விடக் கூடாது என்பதற்காகத் தான், இந்த கடுமையான நிபந்தனைகளாம்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !