உள்ளூர் செய்திகள்

நான்கு சுவற்றுக்குள் இதெல்லாம் சகஜம்!

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டனின் மனைவி, ஹிலாரி கிளின்டன் பார்ப்பதற்கு, அமைதியானவராக தெரிந்தாலும், அவருக்குள் ஒரு மிருகம் உறங்கி கொண்டிருப்பது, சமீபத்தில், ரோஜர் ஸ்டோன் மற்றும் ராபட் மாரோ இணைந்து எழுதிய, 'தி கிளின்டன்ஸ் வார் ஆன் விமன்' என்ற புத்தகம் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.ஹிலாரி, பயங்கர கோபக்காரர்; கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், ஊழியர்களை அடி, பின்னி எடுத்து விடுவார். இவரது அடி, உதைக்கு, பில் கிளிண்டன் கூட தப்பியது இல்லை என்றும், பலமுறை, கிளின்டனை அறைக்குள் விட்டு, கதவை சாத்தி, கும்மி எடுத்துள்ளதாக இந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும், மோனிகா லெவின்ஸ்கி விஷயத்தில் கிளின்டன் சிக்கியபோது, ஹிலாரியின் கோபம், உச்சக்கட்டத்தை அடைந்ததாகவும், அப்போது, கிளின்டன் கன்னத்தில் ஹிலாரி அறைந்ததில், அவரது உதடு பிய்ந்து போனதாகவும் இப்புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கிளின்டன் தரப்பினரோ, 'நான்கு சுவருக்குள் இதெல்லாம் சகஜம்...' என, அலட்சியமாக கூறுகின்றனர்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !