உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல!

ஸ்ருதிஹாசனுக்கு அறிவுரை கொடுத்த கமல்!ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய, 3 மற்றும் வை ராஜா வை படங்கள் தோல்வி அடைந்து விட்டதால், அடுத்தபடியாக படம் இயக்குவதில் அவருக்கு ஆர்வம் குறைந்து விட்டது. மாறாக, குறும்படங்களுக்காக, 'யு-டியூப்' சேனல் துவங்கியுள்ளார். அதையடுத்து, ஐஸ்வர்யாவின் சேனலில், குறும் படங்களை வெளியிடுவதற்காகவே தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளார் ஸ்ருதிஹாசன். இதன் மூலம் குறும்படங்கள், மியூசிக் வீடியோஸ் மற்றும் அனிமேஷன் படங்களை தயாரிக்க இருக்கிறார். இச்செய்தி கமலின் கவனத்துக்கு சென்றபோது, 'நிறுவனம் துவங்குவது பெரிதல்ல; ஆனால், எந்த மாதிரியான படைப்புகளை தருகிறோம் என்பது ரொம்ப முக்கியம்...' என்று, மகளுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.— சி.பொ.,உயிர்த்தோழிகளாயினர் நந்திதா - ஐஸ்வர்யா ராஜேஷ்!அட்டகத்தி படத்தில் இணைந்து நடித்த, நந்திதா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் உயிர் தோழிகளாகி விட்டனர். பெங்களூரில் இருந்து நந்திதா சென்னை வரும் போது, பெரும்பாலும் ஐஸ்வர்யாவின் வீட்டில் தான், 'டேரா' போடுகிறார். இந்த நட்பு காரணமாக, இடம் பொருள் ஏவல் படத்தில், தான் ஒப்பந்தமான போது, அப்படத்தில் இன்னொரு நாயகிக்காக, நந்திதாவுக்கு சிபாரிசு செய்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.அதையடுத்து, கால்ஷீட் பிரச்னையால் தான் தவிர்க்கும் படங்களை, ஐஸ்வர்யா பக்கம் திருப்பி விடும், 'கிவ் அண்ட் டேக் பாலிசி'யில் இறங்கியுள்ளார் நந்திதா. உனக்கு நான் அபயம்; எனக்கு நீ அபயம்!— எலீசாவிருது பெற்ற நடிகையை தேடும் ரஞ்சித்!ரஜினி, 'டான்' வேடத்தில் நடிக்கும் படத்தை இயக்கும், மெட்ராஸ் பட ரஞ்சித், ஸ்கிரிப்ட் ஒர்க், லோகேஷன் வேலைகளை முடித்து விட்டபோதும், கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர், நடிகைகளை தேடுவதில் நேரத்தை செலவிட்டு வருகிறார். ஏற்கனவே, தன் முதல் படத்தில் நடித்த அட்டகத்தி ரஞ்சித், இரண்டாவது படமான மெட்ராஸில் நடித்த கலையரசன் ஆகியோருக்கு அப்படத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளவர், நாயகியாக, தோனி படத்தில் நடித்த ராதிகா ஆப்தேவை தேர்வு செய்துள்ளார்.இதையடுத்து, 'டான்' வேடத்தில் நடிக்கும் வயதான ரஜினிக்கு ஜோடியாக நடிக்க, விருது பெற்ற திறமையான நடிகையை தேடி வருகிறார். காரணம், கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் என்பதால், அழுத்தமான பர்மாமென்ஸ் கொடுக்க வேண்டும். அதனால், இந்தியாவிலுள்ள விருது பெற்ற சில நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் இயக்குனர் ரஞ்சித்.— சி.பொ.,அதிர்ச்சியில் கேத்ரின் தெரசா!மெட்ராஸ் படத்தில் நடித்த கேத்ரின் தெரசா, அனுஷ்கா நடித்துள்ள, ராணி ருத்ரம்மா தேவி படத்தில் இரண்டாவது நாயகியாக கவர்ச்சி காட்டி நடித்துள்ளார். சரித்திர படம் என்பதால், கிளாமர் ஓவராக இருக்காது என்ற நம்பிக்கையில் நடித்தார். ஆனால், சில காட்சிகள் படு கவர்ச்சியாக அமைந்து விட்டது. அதனால், அப்படம் வெளியானால் தன், 'இமேஜ்' பாதிக்கப்படுமே என்று அதிர்ச்சியுடன் உள்ளார். தான் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்!— எலீசாகறுப்பு பூனை!மறைந்த அப்துல் கலாமின் இறுதி சடங்கில் கோலிவுட் நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து சண்டக்கோழி நடிகரிடம் கேட்டபோது, 'அது அவரவர் விருப்பம்...' என்று, 'நறுக்' பதில் கொடுத்துள்ளார். அதையடுத்து, 'படங்களை திருட்டு வி.சி.டி.,யில் பார்ப்பதும் அவரவர் விருப்பம்; அது கூடாது என்று இனிமேல் எந்த நடிகரும் சொல்லக்கூடாது...' என்று, இணையதளங்களில் மேற்படி நடிகருக்கு எதிரான கருத்து, வைரசாக பரவி வருகிறது.'அடுத்த சூப்பர் ஸ்டார் தலயா, தளபதியா?' என்று தமிழகத்தில் அக்கப்போர் நடந்து கொண்டிருக்க, வட மாநில பத்திரிகை ஒன்று, 'தென்னிந்தியாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் தல தான்...' என்று கருத்து வெளியிட்டுள்ளது. இதனால், தளபதியின் ஆட்கள் செம காண்டாகி விட்டனர். அதையடுத்து, மேற்படி பத்திரிகைக்கு லட்சணக்கான அவசர செய்தி அனுப்பி, வெளியான செய்தியை வாபஸ் வாங்குமாறு எச்சரித்து வருகின்றனர்.சினி துளிகள்* புலி படத்தில் தான் நடித்துள்ள, சித்ரகுள்ளன் வேடம் பற்றிய செய்தி, முன்பே வெளியாகி விட்டதால், வருத்தத்தில் இருக்கிறார் விஜய். * 'அஜித்துடன் ஒரு படத்திலேனும் வில்லனாக நடிக்க வேண்டும்...' என்று தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு கூறியுள்ளார்.* பாயும் புலி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் விஷால்.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !