உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

ஆ.மாணிக்கம், பொள்ளாச்சி: என்னை விட, 3 வயது அதிகமான பெண், காதலிப்பதாகக் கூறுகிறார்... என் மனம் ஏற்க மறுக்கிறதே!மறுக்காதீர்கள்... அந்த பெண்ணின், அன்பு தான் முக்கியம்! நம் தேசத் தந்தை, காந்திஜியின் மனைவி, கஸ்துாரிபாய், அவரை விட, ஆறு மாதம் மூத்தவர், கிரிக்கெட் வீரர், சச்சின் டெண்டுல்கரின் மனைவி, அஞ்சலியும், 6 வயது மூத்தவர் என்பதை, மனதில் கொள்ளுங்கள்! இனிமையான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்!* எஸ்.மணிமேகலை, சென்னை: உங்களுக்கு, பெண்களின் மீது மரியாதையும், அன்பும் வர, காரணமானது எது என்பதைத் தெரிந்து கொள்ளலாமா?ஆண் புலிகளும், சிங்கங்களும், தம் குடும்பத்திற்காக, எதுவும் செய்வதில்லை! இதற்கான வேலைகளை மேற்சொன்ன இனத்தில் உள்ள பெண் தான் செய்கிறது; அத்துடன், மற்ற மிருகங்களிடம் எப்படி நடந்து கொள்வது என்றும் கற்றுத் தருகிறது... மனிதர்களில், ஒரு பெண், 10 மாதம் சுமந்து, பெற்றெடுக்கும் தன் வாரிசுகளை எப்படி வளர்க்கிறாள் என்பதை அறிந்து கொண்டதாலேயே, அவர்கள் மீது அன்பும், மரியாதையும் ஏற்படுகிறது.க.கணேசன், மதுரை: எவ்வளவு பெரிய அரசியல்வாதி, ஆட்சியாளராக இருந்தாலும், திடீரென, வீழ்ந்து விடுகின்றனரே... ஏன்?பெரும்பாலும், 'கை நீட்டலால்' தான்! மக்கள் மீது ஈடுபாடு இல்லாமல், தம் வீட்டையும், சொந்தங்களை மட்டும், 'கவனித்து' கொள்வதால், 'கம்பி' எண்ண வேண்டியதாகி விடுகிறது... நம் கண் எதிரே கண்ட உதாரணம், ஜெயலலிதா!* எஸ்.கே.வி.கந்தன், பெங்களூரு: சிறு சம்பவத்தைக் கூட, சில, 'டிவி' சேனல்கள், அரை மணி நேரத்திற்கு ஒருமுறை, மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி, மக்களிடம் பெரிதாக்குகின்றனவே... இது, எதனால்?எவரும், எல்லா நேரமும், 'டிவி' பார்க்க முடியாது என்பதால் இருக்கலாம்! ஆனால், அவை, சிறு பிரச்னைகளைக் கூட பெரிதாக்குகின்றன என்பது தான் வேதனை!ஏ.எஸ்.எம்.ஜோசப், சென்னை:உங்களுக்கு, 'ரோல் மாடல்' என, யார் யாரை நினைக்கிறீர்கள்?முதலில் எங்கள் நிறுவன ஆசிரியர், டி.வி.ஆர்., அடுத்து, 'குமுதம்' இதழின் ஆசிரியராக இருந்த, எஸ்.ஏ.பி. அண்ணாமலை, 'கல்கண்டு' தமிழ்வாணன், 'தினத்தந்தி' ஆசிரியராக இருந்த, சி.பா.ஆதித்தனார், 'சாவி' ஆசிரியராக இருந்த, சா.விஸ்வநாதன், 'இதயம் பேசுகிறது' மணியன் மற்றும் என் தலைவர், லேனா தமிழ்வாணன்! கே.வினாயகம், சென்னை: எனக்கு அடிக்கடி நெஞ்சு வலி வருகிறதே...பொய் சொல்வதை நிறுத்துங்கள்... அந்த வலி பறந்து போய் விடும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !