உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்

** அ.விக்டர், கோவை: தேசிய விருது பெற்ற படங் களை, இன்றைய ரசிகர்கள் பார்க்க பயப்படுவது ஏன்?அடிதடி, டுஷிங், டுஷிங், குத்தாட்டம், கானா பாட்டு ஆகிய வற்றில் ரசிகர்களின் ஆர்வத்தை திருப்பி விட்டு விட்டனரே...****பா.ஜெயபிரகாஷ், சென்னை: இளம் பெண்களிடம் பேசும் போது, முகம் பார்த்து பேசும் தைரியம் உண்டா உங்களிடம்?இரண்டு சங்கதிகள் உண்டு... முதலில், இளம் பெண்கள் யாருமே என்னுடன் பேச வருவதில்லை... இரண்டாவது, அப்படியே பேசி, 'பஸ் ஸ்டாப் எந்தப் பக்கம்?' - 'மார்க்கெட் எந்த சைடு?' எனக் கேட்டு விட்டால் கூட, தந்தி அடித்து விடும் எனக்கு... தலையை குனிந்து, தத்து - பித்து என்று ஏதோ உளறி, தப்பித்தால் போதுமென ஓடி விடுவேன்! ****பொ.கணேசன், மும்பை: காதலிப்பவர்கள் எல்லாம் கல்யாணம் செய்து கொள்கின்றனரா?நான் அறிந்தவரை, 99.99 சதவீதம் இல்லை. பார்க்கும் சினிமா, படிக்கும் கதை, நோக்கும் உலக நடப்பு எல்லாம், ஆணையும் - பெண்ணையும் காதலிக்கத் தூண்டுகின்றன. கல்யாணம் என வரும் போது, இருவருமே நிதர்சனத்தை புரிந்து, அவரவர் வழியே சென்று விடுகின்றனர். **** எம்.ஆரோக்கியமேரி, தூத்துக்குடி: கட்சிகள் அனைத்துமே இன்று கம்யூனலாக - ஏதோ ஒரு ஜாதியை, மதத்தை ஆதரிப்பதாக, அதற்கு பலம் சேர்ப்பதாகத்தானே அமைந்து உள்ளன... எனவே, ஜாதி, மதம் பாராத கம்யூனிஸ்டு களிடம் மத்திய அரசை ஒப் படைத்தால் என்ன?கம்யூனிஸ்ட்டுகளும், 'ஆப்பர்சுனிஸ்டு'களாக மாறி விட்டனர் என்பதுதான் இங்கே சோகம்... சந்தர்ப்பவாதம், கம்யூனிஸ்ட்டுகளை ஆட்டிப் படைக்க ஆரம்பித்து விட்டது. எல்லாம் பதவி மோகம் தான்! காமராஜர் சொன்னது போல், 'எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்...' ஆகி விட்டன.****மு.ரஹீம், கோவில்பட்டி: பிரபல நடிகைகள் எல்லாம், அனேகமாக முதல் கணவனை விரட்டி விட்டு விடுகின்றனரே... ஏன்?அவர்கள் அனுபவித்த சுதந்திரம், புகழ், பணம் அனைத்தையும் திருமண வாழ்வில் இழக்கின்றனர். இந்த திடீர் அதிர்ச்சி, நடிகைகளை எல்லா விதத்திலும் பாதிப்படையச் செய்கிறது. கணவனுக்கு, 'டாட்டா' சொல்லி விடுகின்றனர்.****கே.செந்தில்குமார், விருதுநகர்: நீங்கள் படிப்பில் கெட்டிக்காரரா?இல்லை... சாதாரணமாக ஒரு பக்கத்தை படித்து முடிக்க ஐந்து நிமிடம் ஒருவருக்கு தேவை என்றால், எனக்கு டபுள் த டைம் தேவை! மக்கா அல்லது முழுமை யாக படிக்கிறேனா தெரியவில்லை.***** எச்.ஆனி ராபர்ட், நெல்லை: இந்த உலகம் எந்திரத்தனமாகி வருகிறதா?'பிசினஸ் வேர்ல்ட்' என்ற ஆங்கில இதழ் எடுத்த கருத்துக் கணிப்பைப் பார்க்கும் போது, மனிதர்கள் எந்திரத்தனமாக மாறி வருவதாகவே தோன்றுகிறது. 100க்கு, 32 பிசினஸ் எக்சிகியூட்டிவ்கள் என்ன சொல் கின்றனர் தெரியுமா? 'குடும்பத்துடன் செலவிட நேரமே இல்லை!' இன்னும், 100 பேரில், 51 பேர் சொல்வது இதுதான்: ஒரு நாளில் இரண்டு மணி நேரம் குடும்பத்திற்காக செலவிடுவதே அதிகம்!****கீதாலட்சுமி சுவாமிநாதன், புதுச்சேரி: அடுத்தவர் மனைவி, நம்மிடம் வலிய வந்து, குழைந்து பேசுவதைத் தவிர்க்க முடியாமல் தவிக்கும் ஆணினத் துக்கு உம் யோசனை என்ன?ஒன்றுமே தெரியாத பாப்பா... என்ன தவிப்பு வேண்டியிருக்கு... உண்மையிலேயே தவிர்க்க விருப்பம் இருந்தால், அந்த ஏரியா பக்கமே நடமாட மாட்டீர்களே... ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !