உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

ஜி. குப்புசாமி, சென்னை: நம்பர் 1 நாளிதழ், நம்பர் 1 வார இதழ் என்று, எதன் அடிப்படையில் கூறுகின்றனர்?'ஆடிட் பீரோ ஆப் சர்குலேஷன்' - ஏ.பி.சி., என்ற அமைப்பு, தன் ஆடிட்டர்களால் கணக்கின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.இதில், பல மொழி பத்திரிகைகள், தம் முகவர் வாங்குவதாக காட்டும் விதத்தில், ஆயிரக்கணக்கில் பத்திரிகைகளை அச்சிட்டு, அவற்றை அவர்களுக்கு அனுப்பாமல், பழைய பேப்பர் விற்பனைக்கு அனுப்பி விடுகின்றன; தம் கையில் இருக்கும் பணத்தை, அந்த ஏஜென்சியின் கணக்கில் போட்டு, வரவு வைத்து விடுகின்றன.இதுவே, அவர்கள், 'நம்பர் 1' என்று சொல்வதற்கு ஆதாரமாகி விடுகிறது!இதை நம்பித்தான் அவர்களுக்கு அதிக அளவில் விளம்பரங்கள் வருகின்றன. விளம்பரங்கள் தானே பத்திரிகைகளின் வருமானம்; அப்போது தானே பத்திரிகைகளை தொடர்ந்து நடத்த முடியும்!எஸ். கலைவாணி, மதுரை: நம்மிடம் சீனா போரிடத் துடிப்பது எதனால்?நம்முடைய நிலம் வேண்டும்! அவர்களுடைய மக்கள் தொகை உலகிலேயே அதிகம். அதனால், இடம் வேண்டி அலைகின்றனர்!* எல். விஜயகுமார், சென்னை: இன்று, ஞாபக மறதி உள்ளவர்கள் யார்?பிறரிடம் கடன் வாங்கியவர்கள் தான் இன்று, அதிக ஞாபக மறதியுடன் உள்ளனர்! வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற ஞாபகமே வருவதில்லை!எஸ். கல்பனா, செஞ்சி: கை குலுக்கி வாழ்த்து சொல்லும் முறை குறைந்து வருகிறதே...எல்லாம், 'கொரோனா' கொண்டு வந்த மாற்றம் தான்! இப்போது, வெளிநாட்டு அதிபர்கள் கூட, வணக்கம் தான் சொல்லிக் கொள்கின்றனர். கை பிடித்து குலுக்குவதால், 'கொரோனா' மட்டுமல்ல... 'இன்புளுயன்சா, டிப்தீரியா, நிமோனியா, ஜலதோஷம்' போன்ற தொற்று நோய்கள் அதிக அளவில் பரவும்!வைகை.ஆறுமுகம், திருப்பூர்: ஒருவேளை, ரஜினி கட்சி ஆரம்பித்தால், யாருக்கு பாதகம், யாருக்கு சாதகம்?மக்களுக்குத் தான் சாதகம். இவ்வளவு ஆண்டுகள் மக்களை கொள்ளையடித்த திராவிட கட்சிகளுக்கு பாதகமாக விளையும்!* ஆர். ராகவன், திருச்சி: மனிதர்கள் எப்போது திருந்துகின்றனர்?மரணம் வரும்போது தான்! அதன் மடியில் உட்கார்ந்து இருக்கும்போது, அவனுக்கு திருந்துவது பற்றிய எண்ணம் வருகிறது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !